சென்னை மெட்ரோவின் தூய்மையும், அழகும் வெளிநாட்டுப் பயணியையே வியக்க வைத்துள்ளது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது மெட்ரோ ரயில் நிலையங்களின் தூய்மை, முறையான பராமரிப்பு மற்றும் பயணிகளுக்கான வசதிகளைக் கண்டு வியப்படைந்துள்ளார். QR Code மூலம் வெறும் 30 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துப் பயணம் செய்த அவர், தனது அனுபவத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், உக்ரைனில் உள்ள பொதுப் போக்குவரத்தைவிட சென்னை மெட்ரோ மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் இருப்பதாகப் பாராட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், வெளிநாட்டுப் பெண்ணின் பாராட்டு சென்னை மெட்ரோவின் தரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.