மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 72 நாட்கள் சிகிச்சைக்கு பின் கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு, நவ.19ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, வி.எஸ். பாபு உடல் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று கொண்டுவரப்பட்டது. தலைவர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தவெக தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம் செல்வதற்கு வி.எஸ். பாபு உடலை வாகனத்தில் ஏற்ற உறவினர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் விஜய்யும் உடலை தனது தோளில் சுமந்து சென்றார்.