கோவை மாவட்டம் சூலூா் அருகே கடந்த மே மாதம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சூலூா் அருகே கடந்த மே மாதம் 21-ஆம் தேதியன்று தனது வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி, மாயமாகியுள்ளார். இடன் காரணமாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற தீவிர தேடுதல் பணியில் கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னந்தோப்புப் பகுதியில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.இதனையடுத்து நடைபெற்ற உடற்கூறாய்வு பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டுக் கொடூரமாக கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து விசாரணை தீவிரமடைந்த நிலையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த நாகபட்டினத்தைச் சோ்ந்த காா்த்திக் மற்றும் அவரது நண்பா் மோகன்ராஜ் ஆகியோரை வழக்கில் தொடர்புடையதாக காவல்துறையினர் கைது செய்தனா். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் கார்த்திக், சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும், இதற்கு மோகன் உடந்தையாக இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட காா்த்திக் மற்றும் அவரது நண்பா் மோகன்ராஜ் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இருவருக்குமான தண்டனை விவரங்கள் டிசம்பர்-4 ஆம் தேதியன்று அறிவிக்கப்படுமெனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.