சென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் உள்ள சாலையோரக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். ஏற்கெனவே 39 வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்குவதாகக் கூறிய நிலையில், தங்களுக்கும் கடை ஒதுக்க வேண்டும் என மற்ற வியாபாரிகள் வலியுறுத்தினர். இதனால் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளும் நிலவியது. தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள், அனைவருக்கும் சமமாகக் கடை ஒதுக்காவிட்டால் வடசென்னை முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.