கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே வெற்றி பயணத்திட்ட பேருந்தில் பயணம் செய்த கூலித் தொழிலாளி கருப்பாயி தானியங்கி கதவில் அவரது புடவை சிக்கியதால் தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் திட்டக்குடி பேருந்து நிலையத்திலிருந்து விருத்தாச்சலம் செல்லும் வெற்றி பயணித்திட்ட பேருந்தில் ஏறி கோழியூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்பொழுது கருப்பாயி படியில் இறங்கும் பொழுது அவரின் புடவை தானியங்கி கதவில் சிக்கி கீழே விழுந்துள்ளார். இதனை அறியாமல் ஓட்டுநர் பேருந்து இயக்கியதால் கருப்பாயி பேருந்தின் டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.