டெல்லி ஜந்தர் மந்தரில் அனுமதியின்றி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் முதியவர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) தலைவர் அசுதோஷ் ரங்கா மற்றும் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பெயர்களைப் பதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்திய பின்பும் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தொடரும் இப்போராட்டங்கள் குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.