திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 11 வயது பள்ளிச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தவெக உறுப்பினரும், ஆட்டோ ஓட்டுநருமான 45 வயது ஹாரூன் ரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். சுல்தானிய தெருவில் வசித்து வரும் இவர், தான் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் கீழ்ப்பகுதியில் தாயுடன் வசித்து வந்த சிறுமியிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து, அதிர்ச்சியடைந்த அவர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஹாரூன் ரசாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின்படி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.