சென்னை தண்டையார்பேட்டை மணிகுண்டு பூங்கா அருகே சாலையில் செல்போன் மற்றும் தங்க நகைகள் இருந்த மணி பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த அருண் என்ற சிறுவன், பூங்காவிற்கு விளையாடச் சென்றபோது இதைக் கண்டுள்ளார். உடனடியாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று ஒப்படைத்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, சிறுவனின் கையாலேயே மணி பர்ஸ் மற்றும் செல்போனை ஒப்படைத்தனர். வீட்டில் விசேஷம் இருப்பதால் நகையை அடகு வைக்க எடுத்துச் சென்றபோது தவறவிட்டதாக அந்தப் பெண் தெரிவித்தார். சிறுவனின் நேர்மையான செயலைப் பாராட்டிய போலீசார், புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தினர்.