அழகாக வேண்டும் என்ற ஆசையில் பயன்படுத்திய Fairness Cream... 17 வயது சிறுமிக்கு சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம் கேரள மாநிலம் மலப்புரத்தில் நடந்துள்ளது. ஆன்லைனில் வாங்கிய கிரீமைப் பயன்படுத்திய சிறுமிக்கு Membranous Nephropathy என்ற சிறுநீரக நோய் ஏற்பட்டுள்ளது. அரீக்கோடு ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த சிகிச்சைக்குப் பிறகு சிறுமி ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டுள்ளார். ஆய்வகப் பரிசோதனையில் அந்தக் கிரீமில் 1.25 சதவீதம், அதாவது 12,500 PPM பாதரசம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அழகுசாதனப் பொருட்களில் பாதரசம் பயன்படுத்துவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், பாதரசம் கலந்த கிரீம்கள் விற்பனையைத் தடுக்க கேரள அரசு மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் விற்கப்படும் போலி அழகு சாதனப் பொருட்கள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.