லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, "மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்குத் தவறான குறுஞ்செய்தி அனுப்பித் தொல்லை கொடுக்கும் அளவிற்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவும்போது, மாநிலம் பாதுகாப்பாக இருப்பதாக எப்படிச் சொல்ல முடியும்...?. மேலும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, டெல்டா விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாதது எனக் கடந்த ஆறு மாத கால ஆட்சியில் மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்த சாமானிய மக்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளது. முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டது" என குற்றஞ்சாட்டினார்.