கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி விருத்தாசலத்தில் தீவிரமடைந்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள செராமிக் தொழிற்பேட்டையில், கடந்த 1965ஆம் ஆண்டு முதல் அகல் விளக்குகள், பீங்கான் பொம்மைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. ஆனால், மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் கடந்த காலத்தைவிட 60 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, அரசே மூலப்பொருட்களை வழங்குவதுடன், செராமிக் தொழில்நுட்ப ஆய்வகம் அமைத்து தொழிலை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.