கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், பெண் காவலருக்கு அளித்த மரியாதை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் சதீசனுக்கு பெண் காவலர் ஒருவர் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். இதைக் கவனித்த முதலமைச்சர், உடனடியாகத் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று, முகம் முழுவதும் புன்னகையுடன் அந்தப் பெண் காவலரின் சல்யூட்டுக்கு பதில் மரியாதை செலுத்தினார். பொதுவாக காவலர்கள் அரசியல் தலைவர்களுக்கு சல்யூட் அடிப்பதைப் பார்க்கும் நிலையில், பெண் காவலரின் மரியாதைக்கு முதலமைச்சர் எழுந்து நின்று பதிலளித்த இந்த நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், முதலமைச்சரின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்களும் பிறருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவாகி வருகின்றன.