தீபாவளி கொண்டாட்டங்களை தொடர்ந்து மதுரையின் பல பகுதிகளில் அதிக அளவில் குப்பைகள் குவிந்துள்ளன. தீபாவளி பண்டிகையில் மக்கள் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடை அணிந்தும், இனிப்புகளை பரிமாறியும் உற்சாகமாக கொண்டாடினார்கள். இதன் காரணமாக கடைகள் மற்றும் மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளில் குப்பைகள் அதிகமாக சேர்ந்தன. இதனால் சுகாதார பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் களமிறங்கி தெரு ஓரங்களில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.