யூடியூபரான நிஷாந்த், தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் பல நாட்களாக தேடப்பட்டு வந்தார். இதையடுத்து, தர்மபுரியில் உள்ள சேசம்பட்டியில் தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சேசம்பட்டி போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். கொள்ளையடித்த பிறகு இருசக்கர வாகனம், கார், பேருந்து உள்ளிட்டவற்றின் மூலம் தப்பிச்சென்ற நிஷாந்த், ஆம்னி பேருந்தில் தப்பி செல்ல முயற்சித்துள்ளார்.