சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வருகை தந்த அமைச்சரை அறங்காவலர்கள் வரவேற்றனர். தொடர்ந்து மூலவரான கற்பக விநாயகரை தரிசனம் செய்த அமைச்சர், தங்கக் கவசத்தில் எழுந்தருளிய விநாயகருக்கு நடைபெற்ற தீபாராதனையில் பங்கேற்று வழிபட்டார். கோயிலின் பல்வேறு சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ததுடன், உட்பிரகாரத்தில் உள்ள மரகத மரத்தையும் தொட்டு வணங்கினார். பின்னர் கோயில் அறங்காவலர்கள் சார்பில் அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து, கற்பக விநாயகரின் திருவுருவப்படம் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சரைக் கண்ட பொதுமக்களும் கட்சியினரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது கைக்குழந்தையுடன் வந்த ஒருவரின் குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்த அமைச்சர், கோபுரம் அருகிலும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.