ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் நீங்கள்தான் எங்களுக்கு முதல்வர் எனக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தற்போதைய மோசமான ஆட்சிச் சூழலில் இப்போதும் நான்தான் முதலமைச்சர் என்றும், கே.என்.நேருதான் அமைச்சர் என்றும் கூறுவதற்கு வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது என்றார். எனவே இனி அப்படிச் சொல்ல வேண்டாம் என்றும், விரைவில் நமது ஆட்சி உதயமாகப் போகிறது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கலைஞரைப் போலவே தன்னையும் நேருவையும் யாராலும் பிரிக்க முடியாது என்றும், கலைஞருக்குப் பிறகு கழகத்தை நிலைநிறுத்தியதில் நேரு போன்றோரின் துணை முக்கியமானது என்றும் ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.