மும்பை இந்தியன்ஸ் அணி 16 வீரர்களை தக்கவைத்துள்ளது, அதில் 6 வெளிநாட்டு வீரர்கள் ஆவர். இதுவரை மும்பை அணி ரூ.97.40 கோடியை செலவிட்டுள்ளது, கையிருப்பில் ரூ.32.60 கோடி உள்ளது. இன்னும் 9 வீரர்களை எடுக்கலாம், அதில் 2 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். 13 வீரர்களை விடுவித்துள்ளது, அதில் மூன்று வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். அதிக தொகை கொண்ட டிரன்ட் போல்ட், தீபக் சஹார், அல்ஹா கசன்பர் உள்ளிட்டரையும் மும்பை விடுவித்துள்ளது. இவர்கள் நிச்சயம் ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரையும், இந்திய விக்கெட் கீப்பர் பேட்டரையும், இந்திய ஸ்பின்னரையும் ஏலத்தில் எடுப்பார்கள்.