சென்னை எழும்பூர் லேங்ஸ் கார்டன் சாலையில் தெருநாய்கள் கருத்தடை மையங்களின் செயல்பாடுகளைக் கண்டித்து விலங்கு நல ஆர்வலர்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருத்தடை அறுவை சிகிச்சைகளில் முறையான பராமரிப்பு இல்லாததால் நாய்கள் உயிரிழப்பதாகவும், மனிதாபிமானமற்ற முறையில் நாய்கள் பிடிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இந்த விவகாரங்களுக்கு கால்நடை மருத்துவர் கமால் ஹுசைனே காரணம் எனக் குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், கருத்தடை மையங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு காயங்கள் ஆறுவதற்கு முன்பே நாய்களைத் தெருக்களில் விடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.…