ஆவடி அருகே 16 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியைச் சேர்ந்த 24 வயது சதீஷ், 16 வயது சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரில் சதீஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி ரேவதி, சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டுகளும், பாலியல் வன்கொடுமைக்காக 20 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரைத்தார்.