சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் தனது நீண்ட நாள் காதலரான ராஜ்வேல் ராஜை இன்று திருமணம் செய்துகொண்டார். கல்லூரிக் காலத்தில் தொடங்கிய இவர்களது காதல், பத்து ஆண்டுகளைக் கடந்த நிலையில் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாரம்பரிய சிவப்பு நிற பட்டுப்புடவையில் மணமகளாக ஜொலித்த பிரியாவும், வேட்டி சட்டையில் மணமகன் ராஜ்வேலும் இருக்கும் திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காதல் ஜோடிக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.