அஜித் மற்றும் நயன்தாரா குறித்து திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறிய கருத்து விவாதத்தை கிளப்பியுள்ளது. நடிகர் விஜய் முதலமைச்சராக ஆனதில் இருந்து அஜித் மீது தமிழ் சினிமா கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் அவரும் தற்போது கார் ரேசில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் அஜித், நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக உள்ளனர். நயன்தாரா 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோயினாக உள்ளார். இவர்கள் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதே இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுக்குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில், "அஜித்- நயன்தாரா இருவரும் எந்த ஒரு ப்ரோமோஷனுக்கும் வருவதில்லை, இப்படி இருப்பது அவர்கள் தலையில் ஏதோ கிரீடம் இருப்பதாக நினைக்கிறார்கள், இப்படியே இருந்தால் காணாமல் போவார்கள்" என கூறியுள்ளார். இவரின் பேச்சு விவாதம் ஆகியுள்ள நிலையில், மூக்குத்து அம்மன் 2 பிரமோஷனுக்கு கூட நயந்தாரா வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பட வசூல் பாதிக்கபடுவதாகவும், அஜித், நயந்தாரா தங்கள் படத்தின் பிரமோஷனுக்கு வரவேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.