நடிகை சமந்தா ரூத் பிரபு – இயக்குநர் ராஜ் நிடிமோரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தம்பதியினர் தங்களது Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், குழந்தைக்கு DEV NIDIMORU எனப் பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், 19.11.2026 அன்று பிறந்த தங்களது செல்ல மகனை வரவேற்பதாகக் குறிப்பிட்டு, இதுவரை அனுபவித்திராத மிகப்பெரிய மகிழ்ச்சி இது என்றும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர். சமந்தா மற்றும் ராஜ் தம்பதியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சமந்தாவின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.