நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "இந்தியா-பாகிஸ்தான் எல்லையை விடவும் மிகவும் பதற்றமான இடம் பொதுத்தேர்வுக்குப் படிக்கும் குழந்தைகளின் வீடுதான். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை வீட்டில் பயங்கரவாதிகளைப் போலக் கண்காணிப்பதாகவும், 10ஆம் வகுப்பு முடிந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்றும், பின்னர் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி முடிந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றும் பெற்றோர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கின்றனர். கல்லூரிக்குச் சென்ற பிறகும் இன்ஸ்டாகிராம், யூடியூப் பார்க்கக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. உண்மையான மகிழ்ச்சி என்பது எதிர்காலத்தைப் பற்றிய கவலையின்றி வாழ்வதிலும், நமது பெற்றோர் மற்றும் சுற்றியுள்ளவர்கள் நலமுடன் இருப்பதையும் உறுதிசெய்து, மனநிறைவுடன் வாழ்வதிலும்தான் உள்ளது" என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.