கோவை செல்வபுரம் பகுதி குடியிருப்புக்கு அருகே சுமார் ஐந்து அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடையின் அருகில் இருந்த மரத்தின் அடியில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் பாம்பு மீட்பு பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வந்த மீட்புக் குழுவினர் பாம்பை பிடித்தனர்.. இது அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை அளித்தது.