ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான தினங்களே உள்ளன. தமிழ்நாடு அணி இதுவரை சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி 1இல் வென்று, 2இல் தோற்றிருக்கிறது. இதனால், அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பு மங்கியுள்ளது. தமிழ்நாடு அணி நிச்சயம் அடுத்த 4 போட்டிகளையும் அதிக நெட் ரன்ரேட்டில் வென்றால் மட்டுமே காலிறுதி வாய்ப்பு கிடைக்கும். இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு அணியில் இருந்து புதிதாக யாருக்கு ஐபிஎல் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு, கிரிக்கெட் பயிற்சியாளர் லட்சுமி நாராயணன், ராஜ்குமார் என பதிலளித்துள்ளார். ஏன் ராஜ்குமாருக்கு ஐபிஎல் வாய்ப்பு கிடைக்க வேண்டும், அவரது உழைப்பு ஆகியவை குறித்து இந்த வீடியோவில் காணலாம்.