மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் தீபத்தூரில் தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் இன்று தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு முன்னதாக, தீபத்தூண் உள்ள பகுதிக்கு பக்தர்கள் சென்றபோது தற்போது அனுமதியில்லை என காவல்துறையினர் கூறியதால் பக்தர்கள் வாக்குவாதம் ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் மலை மேல் தர்காவிற்கு செல்லும் வழியில் தான் தீபதூன் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் பக்தர்கள் மலை மேல் பாதி வழியில் காவல் துறையினர் தர்கா செல்லும்பிரிவு பாதையில் பக்தர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் மலை மேல் பக்தர்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது