திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு தினம் பல பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்க்ளுக்கு கோயில் நிர்வாகம் அபிஷேக நேரத்தை மட்டும் அறிவித்துவிட்டு, அபிஷேகம் முடியும் நேரம் மற்றும் தரிசன நேரம் பற்றி சரியாக அறிவிக்காததால் அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.