திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே நகை, பணத்தைத் திருப்பிக் கேட்ட பெண்ணை பி.ஏ.பி. வாய்க்காலில் தள்ளிக் கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 40 வயது கீதாவுக்கும், மெக்கானிக் தொழிலாளியான 38 வயது கதிரவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கீதாவிடம் பெற்ற நகை மற்றும் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு அவர் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கதிரவன், குடிமங்கலம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலுக்கு கீதாவை அழைத்துச் சென்று தண்ணீரில் தள்ளியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் தவறி விழுந்ததாகக் கூறி 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து நாடகமாடியுள்ளார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் கொலைச் சம்பவம் அம்பலமானது. இதையடுத்து கதிரவனை கைது செய்த குடிமங்கலம் போலீசார், கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.