திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக வேலூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வரும் 24-ஆம் தேதி மகா தீபத்தைக் காண ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேலூர் வழியாக திருவண்ணாமலைக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேருந்துகள் தயார் நிலையில் உள்ளனவா, முறையாக இயக்கப்படுமா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வேலூரில் இருந்து 100, திருப்பத்தூரில் இருந்து 40, ஆற்காட்டில் இருந்து 30, திருப்பதி வழியாக 11, பெங்களூருவில் இருந்து 15 என மொத்தம் 196 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகளைச் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.