திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனின் 119-ஆவது ஆண்டு வெள்ளித் தேர்ப் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. மாட வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களின் பக்தி முழக்கங்கள் விண்ணை முட்ட, மாட வீதிகள் முழுவதும் திருவிழாக் கோலமாகக் காட்சியளித்தன.