சென்னை எண்ணூர் பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு 13 வயது சிறுமிகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளும், அருகிலுள்ள சாய்பாபா கோயில் பகுதிக்குச் சென்றுள்ளனர். ஆனால், நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சிறுமிகளின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்த போலீசார், கடைசியாக கடற்கரை பகுதியில் சிக்னல் பதிவானதைக் கண்டறிந்துள்ளனர். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான இளைஞர் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு சிறுமிகளும் எங்கு சென்றார்கள்? அவர்களுக்கு என்ன ஆனது? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.