மக்கள் குறை தீர்க்கும் நிகழ்வில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் அரசியல் கேள்விகளை எழுப்பினர். ராகுல் காந்தியின் சமூக வலைதளப் பதிவு குறித்துக் கேட்டபோது, நீங்கள் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டு தன்னால் பதிலளிக்க முடியாது என்றும், அது குறித்துத் தனக்குத் தெரியாது என்றும் அவர் பதிலளித்தார். மேலும், எதுவாக இருந்தாலும் கட்சித் தலைவர் வெளியிடும் அறிக்கையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுமாறு அவர் கூறினார். தொடர்ந்து, சோனியா காந்தி வருவது குறித்தும், காங்கிரஸ் கட்சி குறித்த சமூக வலைதள விமர்சனங்கள் குறித்தும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குத் தனக்குத் தெரியாது எனக் கூறிவிட்டு, தொண்டர்களின் வாழ்த்து முழக்கங்களுக்கு இடையே அவர் தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.