ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி தங்கம் வென்றது குறித்து கிரிக்கெட் பயிற்சியாளர் லட்சுமி நாராயணன், "ஆசிய அளவில் இந்திய அணிக்கு நிகரான போட்டிகள் எதுவும் இல்லை, அதனால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றதை பெரிய விஷயமாகக் கருத முடியாது. சர்வதேச கிரிக்கெட்டிலேயே இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே நிதி ரீதியாகவும் விளையாட்டு அமைப்பிலும் வலுவாக உள்ளன. இலங்கை மிகவும் பின்தங்கிவிட்டது; உலகக்கோப்பை வென்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கூடச் சிரமப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் உலகக்கோப்பைக்குக் கூடத் தகுதி பெற முடியாத சூழல் நிலவுகிறது. ஆசியாவில் பலமான ஒரே அணியாக இந்தியா மட்டுமே இருப்பதால், ஆசியப் போட்டிகளில் கோப்பை வெல்வது இயல்பான ஒன்றுதான். ஆனால், உலகக்கோப்பையை வென்றது பாராட்டுக்குரியது; இந்திய அணியின் இந்த வெற்றிக்கு ஐபிஎல் தொடரே மிக முக்கியமான பலமாக அமைந்தது" என்றார்.