சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 வீரர்களை தக்கவைத்திருக்கிறது சிஎஸ்கே அணி. இன்னும் 6 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். அதில் 2 வெளிநாட்டு வீரர்களை சிஎஸ்கே எடுக்கலாம். கையிருப்பில் ரூ.28.05 கோடியே சிஎஸ்கே அணியிடம் உள்ளது. தோனி மற்றும் பிரசாந்த் வீர் என 11 வீரர்களை விடுத்திருக்கிறது. அதில் 5 பேர் வெளிநாட்டு வீரர்கள். அதிக பர்ஸ் தொகையை வைத்துள்ள அணிகளின் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது சிஎஸ்கே. கார்த்திக் சர்மாவை ரிலீஸ் செய்திருந்தால் ரூ.42.25 கோடியுடன் சிஎஸ்கே ஏலத்திற்குள் சென்றிருக்கலாம். இதனால், கேகேஆர், லக்னோ அணியிடம் சரிசமமாக போராடியிருக்கலாம். குறைந்தபட்சம் ராகுல் சஹாரை ரிலீஸ் செய்திருந்தால் ரூ.33.25 கோடியுடன் சென்றிருக்கலாம். மும்பை அணியிடனாவது ஏலத்தில் மோதியிருக்கலாம். இரண்டு பேரையும் ரிலீஸ் செய்திருந்தால் அதிக தொகையுடன் சென்றிருக்கும் அணியே சிஎஸ்கேவாக இருந்திருக்கும். கார்த்திக் சர்மா வேண்டுமென்றால் இன்னும் குறைந்த தொகையில் அவரை ஏலத்திலேயே எடுத்திருக்கலாம். சிஎஸ்கே பெரிய தவறு செய்துவிட்டது.