<?xml version="1.0" encoding="UTF-8"?><urlset xmlns="http://www.sitemaps.org/schemas/sitemap/0.9" xmlns:video="http://www.google.com/schemas/sitemap-video/1.1"><url><loc>https://www.zeenewstamil.com/short-videos/isro-successfully-raises-orbit-of-navic-navigation-satellite-launched-aboard-gslv-20295</loc><video:video><video:content_loc>https://vodakm.zeenews.com/vod/ISROSHORTSbalaji.mp4/index.m3u8</video:content_loc><video:title><![CDATA[ககன்யான் திட்டம் எந்த நிலையில் இருக்கு?]]></video:title><video:thumbnail_loc>https://cdn.zeenewstamil.com/sites/default/files/2026/11/01/20420-isroshortsbalaji-1793539517-00000003.jpg</video:thumbnail_loc><video:description><![CDATA[சமீபத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட நேவிக் (NavIC) செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 170 கி.மீ x 38,000 கி.மீ நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இச்செயற்கைக்கோளின் என்ஜின்களை இயக்கி, சுற்றுப்பாதையை மேலும் உயர்த்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் தரை, வான் மற்றும் கடல்வழிப் போக்குவரத்தை துல்லியமாகக் கண்காணிக்கவும், விமானப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கும் இந்த நேவிக் வழிகாட்டுதல் திட்டம் பெரும் பயனுள்ளதாக அமையும் என்றும், நாட்டின் விரிவான சேவைக்கு குறைந்தபட்சம் நான்கு செயற்கைக்கோள்கள் மிக அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></video:description><video:duration>85</video:duration><video:publication_date>2026-11-01T18:55:05+05:30</video:publication_date><video:live>no</video:live><video:family_friendly>yes</video:family_friendly></video:video></url><url><loc>https://www.zeenewstamil.com/videos/offered-rs-5-crore-for-chairman-post-but-we-chose-merit-minister-rajmohan-clarifies-20294</loc><video:video><video:content_loc>https://vodakm.zeenews.com/vod/ZEE_HINDUSTAN_TAMIL/RAJMOHANBYTEbalajii.mp4/index.m3u8</video:content_loc><video:title><![CDATA[தலைவர் பதவிக்கு ரூ.5 கோடியா? - அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன விளக்கம்!]]></video:title><video:thumbnail_loc>https://cdn.zeenewstamil.com/sites/default/files/2026/11/01/20419-rajmohanbytebalajii-1793539516-00000003.jpg</video:thumbnail_loc><video:description><![CDATA[இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்காக ரூ.5 கோடி கொடுக்க ஒருவர் முன்வந்ததாகவும், ஆனால் ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெறாமல் தகுதியானவர்களுக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், எத்தனை கோடிகள் கொடுத்தாலும் பரிந்துரைகளுக்கோ லஞ்சத்திற்கோ இடமில்லை என்றும், புஷ்பவனம் குப்புசாமி போன்ற நாட்டுப்புறக் கலைஞர்கள் நேர்மையான முறையிலேயே தேர்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் மூன்று முதல்வர்கள் இருப்பதாகக் கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், மாநிலத்தில் ஒரே ஒரு முதல்வர் மட்டுமே முழு அதிகாரத்துடன் செயல்படுகிறார் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.]]></video:description><video:duration>152</video:duration><video:publication_date>2026-11-01T18:55:02+05:30</video:publication_date><video:live>no</video:live><video:family_friendly>yes</video:family_friendly></video:video></url><url><loc>https://www.zeenewstamil.com/short-videos/chennai-cmwssb-clears-4-day-sewage-overflow-in-ward-128-residents-demand-monsoon-precaution-works-20293</loc><video:video><video:content_loc>https://vodakm.zeenews.com/vod/DRAINAGESHORTSbalaji.mp4/index.m3u8</video:content_loc><video:title><![CDATA[பருவமழைக்கு முன் தப்புமா சென்னை?]]></video:title><video:thumbnail_loc>https://cdn.zeenewstamil.com/sites/default/files/2026/11/01/20418-drainageshortsbalaji-1793539211-00000003.jpg</video:thumbnail_loc><video:description><![CDATA[சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 10, வார்டு 128-ல் அமைந்துள்ள பச்சையம்மன் கோவில் 2-வது தெருவில், கடந்த நான்கு நாட்களாகக் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகச் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடி பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியிருந்தது. கரும் நிறத்தில் வழிந்தோடிய கழிவுநீரால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், பள்ளி மாணவர்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் அவல நிலையும் நீடித்து வந்த நிலையில், தற்போது அப்பகுதியில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் சீரமைப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு அடைப்புகளைச் சரிசெய்து வருகின்றனர். நான்கு நாட்களாக நீடித்த இந்த அவதிக்கு தற்போது தீர்வு காணப்பட்டு வரும் நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே அனைத்துப் பகுதிகளிலும் கழிவுநீர் கால்வாய்களை முறையாகத் தூர்வாரிப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மழைக்காலத்தில் இதுபோன்ற அடைப்புகள் ஏற்பட்டால் கழிவுநீரும் மழைநீரும் ஒன்றாகக் கலந்து டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், பருவமழைக்கு முன்னரே போர்க்கால அடிப்படையில் அனைத்து வார்டுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.]]></video:description><video:duration>70</video:duration><video:publication_date>2026-11-01T18:50:04+05:30</video:publication_date><video:live>no</video:live><video:family_friendly>yes</video:family_friendly></video:video></url><url><loc>https://www.zeenewstamil.com/videos/omron-healthcare-begins-blood-pressure-monitor-production-in-chennai-plans-10x-expansion-by-2028-20292</loc><video:video><video:content_loc>https://vodakm.zeenews.com/vod/ZEE_HINDUSTAN_TAMIL/011126ZTOMRONPKGbalaji.mp4/index.m3u8</video:content_loc><video:title><![CDATA[ஜப்பானின் Omron தமிழகத்தில் மெகா முதலீடு - எவ்வளவு வேலைவாய்ப்பு? -  கிடைக்கும் பலன்கள் என்ன?]]></video:title><video:thumbnail_loc>https://cdn.zeenewstamil.com/sites/default/files/2026/11/01/20417-011126ztomronpkgbalaji-1793538911-00000003.jpg</video:thumbnail_loc><video:description><![CDATA[இந்தியாவில் மருத்துவக் கருவிகள் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில், ஜப்பானைச் சேர்ந்த ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது.

சென்னைக்கு அருகே உள்ள ஒரகடம் பகுதியில், மஹிந்திராவின் ஆரிஜின்ஸ் தொழிற்பூங்காவில் தனது முதல் இந்தியத் தொழிற்சாலையை அமைத்துள்ள இந்நிறுவனம், அங்கு ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் கருவிகளின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

சுமார் 24 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையில், தற்போது 5 உற்பத்திப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கருவிகள் முதற்கட்டமாக இந்தியச் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளன.

இதற்கிடையே, 2028-ஆம் ஆண்டுக்குள் சென்னையில் உள்ள தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை தற்போதைய அளவிலிருந்து 10 மடங்கு அதிகரிக்க, ஓம்ரான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அயுமு ஒகாடா, சென்னையில் முழு அளவிலான உற்பத்தி தொடங்கியிருப்பது, இந்தியாவில் மருத்துவத் தரத்திலான ரத்த அழுத்தக் கருவிகளின் சீரான விநியோகத்தை உறுதி செய்யும் முக்கியமான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதுடன், இந்தியாவில் உள்ள மருத்துவ நிபுணர்கள் மற்றும் கூட்டாளர்களுடனான ஒத்துழைப்பையும் அதிகரிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கும் ஊக்கம் கிடைப்பதுடன், உள்ளூர் உதிரிபாகங்கள் கொள்முதல், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பணியாளர்களின் திறன் மேம்பாட்டுக்கும் இந்தத் தொழிற்சாலை பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1973-ஆம் ஆண்டு முதல் ரத்த அழுத்தக் கருவிகளைத் தயாரித்து வரும் ஓம்ரான், இதுவரை 130 நாடுகளில் 40 கோடிக்கும் அதிகமான கருவிகளை விற்பனை செய்துள்ளது. மேலும், 97 நாடுகளில் அதன் கருவிகளுக்கு ஒழுங்குமுறை அனுமதியும் கிடைத்துள்ளது.

இந்தியாவில் 2010-ஆம் ஆண்டு தனது வர்த்தகத்தைத் தொடங்கிய இந்நிறுவனம், 2024-25 நிதியாண்டில் 246 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இந்திய உயர் ரத்த அழுத்த ஆய்வுச் சங்கத்துடன் இணைந்து, வீடுகளில் ரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பதற்கான இந்தியாவின் முதல் வழிகாட்டுதல்களையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

சென்னையில் உற்பத்தித் திறன் 10 மடங்கு அதிகரிக்கப்படும்போது, மருத்துவக் கருவிகள் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.]]></video:description><video:duration>157</video:duration><video:publication_date>2026-11-01T18:45:04+05:30</video:publication_date><video:live>no</video:live><video:family_friendly>yes</video:family_friendly></video:video></url><url><loc>https://www.zeenewstamil.com/short-videos/seed-found-growing-inside-russia-man-eye-20290</loc><video:video><video:content_loc>https://vodakm.zeenews.com/vod/seedshortsnov1.mp4/index.m3u8</video:content_loc><video:title><![CDATA[கண்ணுக்குள் முளைத்த செடி! அதிர்ந்து போன மருத்துவர்கள்]]></video:title><video:thumbnail_loc>https://cdn.zeenewstamil.com/sites/default/files/2026/11/01/20414-seedshortsnov1-1793535617-00000003.jpg</video:thumbnail_loc><video:description><![CDATA[ரஷ்யாவைச் சேர்ந்த நாற்பத்திரண்டு வயதான மாக்சிம் ஸ்லெப்ட்சோவ் என்பவரின் கண்ணுக்குள் புகுந்த விதை, முளைத்து மூன்று மில்லி மீட்டர் நீளத்திற்கு வேர் விட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விடுமுறைப் பயணத்தின் போது மீன் பிடிக்க சென்ற நிலையில் மரக்கிளை ஒன்று அவரது முகத்தில் மோதி உள்ளது அப்போது கண்ணுக்குள் சென்ற இந்த விதையினால், அவர் பல மாதங்களாகக் கடுமையான தலைவலி, கண் வீக்கம் மற்றும் இரட்டைப் பார்வையால் அவதிப்பட்டு வந்தார். தீவிர பரிசோதனைக்குப் பிறகு, கண் மருத்துவர்கள் அவருக்குப் பகுதி மயக்க மருந்து வழங்கி, நுட்பமான அறுவை சிகிச்சை மூலம் கண்ணுக்குள் வேர்விட்டிருந்த அந்த விதையைப் பாதுகாப்பாக அகற்றினர்.]]></video:description><video:duration>48</video:duration><video:publication_date>2026-11-01T17:50:05+05:30</video:publication_date><video:live>no</video:live><video:family_friendly>yes</video:family_friendly></video:video></url><url><loc>https://www.zeenewstamil.com/short-videos/elon-musk-saya-humans-will-no-longer-need-to-work-for-a-salary-20288</loc><video:video><video:content_loc>https://vodakm.zeenews.com/vod/muskshortsnov1.mp4/index.m3u8</video:content_loc><video:title><![CDATA[இனி யாருக்கும் சம்பளமே இல்லை! 10 ஆண்டுகளில் நடக்கப் போகும் அதிரடி!]]></video:title><video:thumbnail_loc>https://cdn.zeenewstamil.com/sites/default/files/2026/11/01/20412-muskshortsnov1-1793535019-00000003.jpg</video:thumbnail_loc><video:description><![CDATA[எதிர்காலத்தில் மனிதர்கள் சம்பளத்திற்காகவோ பணத்திற்காகவோ வேலை செய்ய வேண்டிய அவசியமே இருக்காது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அடுத்த பத்து முதல் இருபது ஆண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும், ஆப்டிமஸ் போன்ற மனித உருவ ரோபோக்களும் மனிதர்கள் செய்யும் உடலுழைப்பு மற்றும் அறிவுசார் பணிகளை முழுமையாக ஏற்கத் தொடங்கிவிடும். இதனால் உழைப்புக்கான கட்டாயம் மறைந்து, வேலைக்குச் செல்வது என்பது ஒரு பொழுதுபோக்காகவோ விளையாட்டு போன்ற ஒன்றாகவோ மாறும் என்றும், பணம் என்பது மதிப்பிழந்த ஒரு சாதாரண டோக்கனாக மட்டுமே மாறும் என்றும் அவர் கணித்துள்ளார்.  
மனிதர்களுக்கு வேலை இல்லாத சூழலில் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய 'யூனிவர்சல் ஹை இன்கம்' என்ற திட்டத்தை மஸ்க் முன்வைக்கிறார். அதன்படி, ரோபோக்கள் மூலம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அரசு அதிக வரி வசூலித்து, அந்தத் தொகையை மக்களுக்கு வழங்க வேண்டும்; அந்தப் பணத்தைக் கொண்டு மக்கள் பொருட்களை வாங்கும் போது, அது மீண்டும் நிறுவனங்களுக்கே சுழற்சி முறையில் சென்றுவிடும் என்பது அவரது வாதம். ஆனால், இந்த வளங்கள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படாவிட்டால் பெரும் பொருளாதாரப் பேரழிவு ஏற்படும் என்றும், குறிப்பிட்ட சில பெருநிறுவனங்களே முழு உலகையும் ஆளும் தொழில்நுட்ப நிலப்பிரபுத்துவம் உருவாகும் அபாயம் உள்ளதாகவும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.]]></video:description><video:duration>86</video:duration><video:publication_date>2026-11-01T17:40:05+05:30</video:publication_date><video:live>no</video:live><video:family_friendly>yes</video:family_friendly></video:video></url><url><loc>https://www.zeenewstamil.com/short-videos/wife-skips-karwa-chauth-fasting-man-threatens-divorce-in-madhya-pradesh-20286</loc><video:video><video:content_loc>https://vodakm.zeenews.com/vod/fastingshortsnov1.mp4/index.m3u8</video:content_loc><video:title><![CDATA[விவாகரத்து செய்ய இப்படியும் காரணம் தேடும் கணவர்!]]></video:title><video:thumbnail_loc>https://cdn.zeenewstamil.com/sites/default/files/2026/11/01/20409-fastingshortsnov1-1793534713-00000003.jpg</video:thumbnail_loc><video:description><![CDATA[வட இந்தியாவில் திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக நாள் முழுவதும் உணவின்றி 'கர்வா சௌத்' விரதம் அனுசரிப்பது வழக்கம். ஆனால், தன் மனைவி இந்த விரதத்தை மேற்கொள்ளாததால் அதிர்ச்சியடைந்த கணவர் ஒருவர், காவல் நிலையத்தின் கதவுகளைத் தட்டியுள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.  காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில், "கர்வா சௌத் விரதம் கடைப்பிடித்தால் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என்பது நம்பிக்கை. ஆனால், எனது மனைவி இந்த விரதத்தைக் கடைப்பிடிக்காமல் தவிர்த்துவிட்டார். இதன் மூலம் நான் உயிரிழக்க வேண்டும் என்றே அவர் காத்திருக்கிறார்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.   மேலும், இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, மனைவியிடமிருந்து விவாகரத்து பெற உள்ளதாகவும் அவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பாரம்பரிய நம்பிக்கையின் பெயரில் காவல் நிலையம் வரை சென்ற இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.]]></video:description><video:duration>74</video:duration><video:publication_date>2026-11-01T17:35:05+05:30</video:publication_date><video:live>no</video:live><video:family_friendly>yes</video:family_friendly></video:video></url><url><loc>https://www.zeenewstamil.com/videos/centre-moots-privatisation-of-chennai-aiport-under-ppp-model-20287</loc><video:video><video:content_loc>https://vodakm.zeenews.com/vod/ZEE_HINDUSTAN_TAMIL/airportpkgnov1.mp4/index.m3u8</video:content_loc><video:title><![CDATA[சென்னை ஏர்போர்ட் நிர்வாகத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு தீவிரம் - விரைவில் அறிவிப்பு?!]]></video:title><video:thumbnail_loc>https://cdn.zeenewstamil.com/sites/default/files/2026/11/01/20415-chennai-airport.jpeg</video:thumbnail_loc><video:description><![CDATA[சென்னை விமான நிலையத்தின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க முதலமைச்சர் விஜயின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கை, மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தின் நிர்வாகம், செயல்பாடு மற்றும் எதிர்கால விரிவாக்கப் பணிகளை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருந்து, வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க &nbsp;முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியிருந்தார்.இதுதொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், விமானப் பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம் மற்றும் சரக்குப் போக்குவரத்து அதிகரித்து வருவதால், விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் விஜய் சுட்டிக்காட்டியிருந்தார்.மேலும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், நவீன விமான நிலைய வசதிகள் முக்கியம் என அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அளித்துள்ள பதில், இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.முதலமைச்சர் எழுதிய கடிதத்தை, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கருத்துக்காக &nbsp;பிரதமர் அலுவலகம் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கோரிக்கை மத்திய அமைச்சகத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும், இந்திய விமான நிலைய ஆணையத்தின் கருத்துகளையும் கேட்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.இந்தய விமான நிலையங்கள் ஆணையத்தின் கருத்துகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும், அவை கிடைத்த பிறகே, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான மாற்று இடங்களைத் தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது. அதேசமயம், தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கும் யோசனைக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விமான நிலையப் பராமரிப்புப் பணிகளில் மட்டுமே தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் தமிழக அரசு ஏற்கெனவே விளக்கமளித்துள்ளது.சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றுவது தொடர்பான முடிவில், விமான நிலையங்கள் ஆணையத்தின் கருத்துகள் கிடைத்த பிறகே மத்திய அரசின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும். சென்னையின் விமானப் போக்குவரத்து மேம்பாட்டுக்கு இந்த முடிவு எந்த அளவுக்கு உதவும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.]]></video:description><video:duration>135</video:duration><video:publication_date>2026-11-01T17:35:04+05:30</video:publication_date><video:live>no</video:live><video:family_friendly>yes</video:family_friendly></video:video></url><url><loc>https://www.zeenewstamil.com/videos/why-mohammed-shami-got-no-chance-in-odi-squad-ahead-of-icc-world-cup-2027-preparation-20285</loc><video:video><video:content_loc>https://vodakm.zeenews.com/vod/ZEE_HINDUSTAN_TAMIL/ShamiSusan1.mp4/index.m3u8</video:content_loc><video:title><![CDATA[இந்திய அணியில் ஏன் ஷமிக்கு வாய்ப்பு இல்லை? உலகக் கோப்பை வெல்வது கடினமா?]]></video:title><video:thumbnail_loc>https://cdn.zeenewstamil.com/sites/default/files/2026/11/01/20411-whatsapp-image-2026-11-01-at-170727.jpeg</video:thumbnail_loc><video:description><![CDATA[இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் வரும் நவம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நடப்பு ஓடிஐ தொடரில் சிராஜ் மட்டுமே சீனியர் பௌலர் ஆவார். ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய மூத்த வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. முகமது சிராஜிற்கு பக்கத்துணையாக அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரர், ஆகிப் நபி, யாஷ் தாக்கூர் ஆகிய இளம் வேகப்பந்துவீச்சு படைதான் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்நிலையில், ஐசிசி உலகக் கோப்பை தொடர் அடுத்தாண்டு நடைபெற இருக்கிறது. இந்திய ஓடிஐ அணியின் வேகப்பந்துவீச்சு படை எப்படி இருக்கிறது...? மூத்த பௌலர்களான முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது...? என்பதை இங்கு விரிவாக காணலாம்.]]></video:description><video:duration>506</video:duration><video:publication_date>2026-11-01T17:30:05+05:30</video:publication_date><video:live>no</video:live><video:family_friendly>yes</video:family_friendly></video:video></url><url><loc>https://www.zeenewstamil.com/videos/sivagangai-district-manamadurai-women-attack-by-mob-in-house-20271</loc><video:video><video:content_loc>https://vodakm.zeenews.com/vod/ZEE_HINDUSTAN_TAMIL/WomenPKGSusan1.mp4/index.m3u8</video:content_loc><video:title><![CDATA[வீட்டுக்குள் புகுந்த கும்பல்... பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... ஷாக்கில் உறைந்த பொதுமக்கள்]]></video:title><video:thumbnail_loc>https://cdn.zeenewstamil.com/sites/default/files/2026/11/01/20406-whatsapp-image-2026-11-01-at-170742-1.jpeg</video:thumbnail_loc><video:description><![CDATA[சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாகக் கொலை செய்து, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை சி.எஸ்.ஐ. பள்ளி வளாகப் பகுதியில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவரது மனைவி வசந்த மல்லிகா. இவர் வீட்டில் தனியாக இருந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். தொடர்ந்து, வசந்த மல்லிகாவைத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்த அவர்கள், அவர் அணிந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அபிஷேக் குப்தா, நேரில் பார்வையிட்டு தீவிர கள ஆய்வு மேற்கொண்டார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் முக்கியத் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கொலையாளிகள் யார், அவர்கள் திட்டமிட்டு நகைகளுக்காக மட்டுமே இக்கொலையைச் செய்தனரா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த இந்த துணிகரக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் மானாமதுரை சுற்றுவட்டாரப் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.]]></video:description><video:duration>118</video:duration><video:publication_date>2026-11-01T17:05:02+05:30</video:publication_date><video:live>no</video:live><video:family_friendly>yes</video:family_friendly></video:video></url><url><loc>https://www.zeenewstamil.com/videos/november-1-changes-tasmac-shops-10-rupees-added-in-mrp-20270</loc><video:video><video:content_loc>https://vodakm.zeenews.com/vod/ZEE_HINDUSTAN_TAMIL/TASMACSUsanNov1.mp4/index.m3u8</video:content_loc><video:title><![CDATA[மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்... இன்று முதல் மதுபானம் விலை உயருகிறதா?]]></video:title><video:thumbnail_loc>https://cdn.zeenewstamil.com/sites/default/files/2026/11/01/20407-whatsapp-image-2026-11-01-at-170742.jpeg</video:thumbnail_loc><video:description><![CDATA[தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை நவம்பர் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையான எம்.ஆர்.பி.யில், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணமான 10 ரூபாயைச் சேர்த்து புதிய விலையை நிர்ணயிக்க தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் முடிவு செய்துள்ளது. உதாரணமாக, தற்போது 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் மதுபாட்டிலின் விலை, நவம்பர் 1ஆம் தேதி முதல் 180 ரூபாயாக உயர்கிறது. இதேபோல், அனைத்து வகையான மதுபானங்களின் விலையும் 10 ரூபாய் அதிகரிக்கிறது. இதுவரை மதுபானம் வாங்கும்போது, பாட்டிலின் விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. காலி பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும்போது, அந்த 10 ரூபாய் நுகர்வோருக்குத் திருப்பி வழங்கும் வகையில், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நவம்பர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்படுகிறது. இனி 10 ரூபாயைத் தனியாக வசூலிக்காமல், மதுபாட்டிலின் புதிய விலையிலேயே அந்தத் தொகை சேர்க்கப்படும். இருப்பினும், தகுதியுள்ள காலி மது பாட்டில்களைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு, வழக்கம்போல் 10 ரூபாயைப் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதுதொடர்பாக, அக்டோபர் 29ஆம் தேதி டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள், பீர், ஒயின், பிற மாநில மதுபானங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் என அனைத்து வகைகளுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும். எஃப்.எல்.2 மற்றும் எஃப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கான விலையும் மாற்றியமைக்கப்படுகிறது.]]></video:description><video:duration>168</video:duration><video:publication_date>2026-11-01T17:00:05+05:30</video:publication_date><video:live>no</video:live><video:family_friendly>yes</video:family_friendly></video:video></url><url><loc>https://www.zeenewstamil.com/short-videos/minister-arunraj-update-on-online-appointment-process-in-government-hospital-20269</loc><video:video><video:content_loc>https://vodakm.zeenews.com/vod/Arunrajnov1susan.mp4/index.m3u8</video:content_loc><video:title><![CDATA[அரசு மருத்துவமனைகளில் வருது முன்பதிவு முறை - அமைச்சர் அறிவிப்பு!]]></video:title><video:thumbnail_loc>https://cdn.zeenewstamil.com/sites/default/files/2026/11/01/20389-arunrajnov1susan-1793531715-00000003.jpg</video:thumbnail_loc><video:description><![CDATA[டெங்கு பாதிப்பு முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. அதைத் தடுக்கப் போதிய கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இருப்புடன், மருத்துவர்களுக்கும் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க, 'நலம்' வாட்ஸ்அப் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக விரைவில் ஆன்லைன் முன்பதிவு (Appointment) முறை செயல்படுத்தப்பட உள்ளது. காலை 8 மணி முதல் 10 மணிக்குள் நோயாளிகள் ஒரே நேரத்தில் குவிவதால் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, குறிப்பிட்ட நேரத்தை முன்பதிவு செய்து வர வழிவகை செய்யப்படும். இதன் மூலம் நெரிசல் பெருமளவு குறையும். தாம்பரம் மருத்துவமனை விவகாரம் குறித்து முதல்வருடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்.]]></video:description><video:duration>99</video:duration><video:publication_date>2026-11-01T16:45:03+05:30</video:publication_date><video:live>no</video:live><video:family_friendly>yes</video:family_friendly></video:video></url></urlset>