• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /2027 ஒருநாள் உலகக் கோப்பை: அறிமுகமாகும் புதிய ஃபார்மட்.. ‘சூப்பர் சீரிஸ்’! IND போட்டிகள் - முழு அட்டவணை

2027 ஒருநாள் உலகக் கோப்பை: அறிமுகமாகும் புதிய ஃபார்மட்.. ‘சூப்பர் சீரிஸ்’! IND போட்டிகள் - முழு அட்டவணை

2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான முழு அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி வெளியிட்டுள்ளது. இத்தொடரில் இந்தியாவுக்கு எப்போது போட்டி? பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி எப்போது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Written ByR Balaji
Published: Oct 01, 2026, 10:52 PM IST|Updated: Oct 01, 2026, 10:59 PM IST
joinshare
2027 ஒருநாள் உலகக் கோப்பை: அறிமுகமாகும் புதிய ஃபார்மட்.. ‘சூப்பர் சீரிஸ்’! IND போட்டிகள் - முழு அட்டவணை

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
2027 ஒருநாள் உலகக் கோப்பை: அறிமுகமாகும் புதிய ஃபார்மட்.. ‘சூப்பர் சீரிஸ்’! IND போட்டிகள் - முழு அட்டவணை

2027 ஒருநாள் உலகக் கோப்பை: அறிமுகமாகும் புதிய ஃபார்மட்.. ‘சூப்பர் சீரிஸ்’! IND போட்டிகள் - முழு அட்டவணை

2

இனி டோல் கேட்ல நிற்க வேண்டாம்.. பரனூரில் அமலான புதிய வசதி!

3

‘சிக்மா’ ரிலீஸ்..ஜேசன் சஞ்சய்க்கு ஜோதிகா வாழ்த்து! என்ன கூறியிருக்கிறார்?

4

விஜய் நினைப்பது வேறு, நடப்பது வேறு.. நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

5

Explained : மரண தண்டனை..2 முறை விஷ ஊசி போட்டும் சாகாத பெண்! என்ன காரணம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா இணைந்து நடத்தும் இந்தத் தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. அக்டோபர் 2, 2027 முதல் நவம்பர் 21 வரை நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 57 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த முறை உலகக் கோப்பையின் முக்கியமான மாற்றம் அதன் போட்டி வடிவம்தான். வழக்கமான லீக் போட்டிகள் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளுக்கு பதிலாக, 2027 உலகக் கோப்பை Super Series, Group Stage, Super 7 என மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.

14 அணிகள் எப்படி பிரிக்கப்படுகின்றன?

முதலில் தகுதி பெற்ற 14 அணிகளில் தரவரிசையில் 12 முதல் 14-வது இடங்களில் இருக்கும் மூன்று அணிகள் Super Series சுற்றில் விளையாடும்.

The #CWC27 groups are locked ⚡🔐

A cricketing extravaganza awaits! How to watch the schedule launch ➡️ https://t.co/Eod5GoN7zW pic.twitter.com/oVg7zVHLNF

— ICC (@ICC) October 1, 2026

இந்த மூன்று அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு போட்டியில் மோதும். மொத்தம் 3 போட்டிகள் நடைபெறும். இதில் அதிக வெற்றிகளைப் பெற்று முதலிடம் பிடிக்கும் அணி அடுத்த கட்டமான Group Stage-க்கு தகுதி பெறும். இதனால் Super Series-ல் விளையாடும் 3 அணிகளில் ஒரு அணிக்கு மட்டுமே Group Stage-க்குள் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

Group Stage எப்படி இருக்கும்?

Super Series வெற்றியாளருடன் சேர்த்து மொத்தம் 12 அணிகள் Group Stage-ல் விளையாடும். இந்த 12 அணிகளும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் 6 அணிகள் இருக்கும். ஒவ்வொரு அணியும் தனது குழுவில் உள்ள மற்ற 5 அணிகளுடன் தலா ஒரு முறை விளையாடும். இதன்படி Group Stage-ல் மொத்தம் 30 போட்டிகள் நடைபெறும்.

ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதேபோல், இரண்டு குழுக்களிலும் 4-வது இடம் பிடிக்கும் அணிகளில் நல்ல நெட் ரன்ரேட் வைத்திருக்கும் ஒரு அணிக்கும் Super 7 சுற்றில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அதாவது, Group Stage முடிவில் மொத்தம் 7 அணிகள் அடுத்த கட்டத்துக்கு செல்லும்.

சூப்பர் 7 சுற்று

Group Stage-ல் தகுதி பெறும் 7 அணிகளும் மீண்டும் ஒரே குழுவாக இணைந்து Super 7 சுற்றில் விளையாடும். ஒவ்வொரு அணியும் மற்ற 6 அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதும். இதனால் Super 7 சுற்றில் மொத்தம் 21 போட்டிகள் நடைபெறும்.

முக்கியமாக, Group Stage-ல் பெற்ற புள்ளிகள் Super 7 சுற்றுக்கு எடுத்துச் செல்லப்படாது. புதிய சுற்றாகவே Super 7 தொடங்கும்.

Super 7 முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். முதல் இடம் பிடிக்கும் அணி 4-வது இடம் பிடித்த அணியையும், 2-வது இடம் பிடிக்கும் அணி 3-வது இடம் பிடித்த அணியையும் எதிர்கொள்ளும்.

Group A-வில் இந்தியா

இந்தியா Group A-வில் இடம்பெற்றுள்ளது. இந்த குழுவில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் Super Series மூலம் வரும் ஒரு அணி இடம்பெறும்.

இந்தியாவின் Group Stage போட்டிகள் அக்டோபர் 7 முதல் தொடங்குகின்றன. முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்தியாவின் Group Stage போட்டிகள்:

  • அக்டோபர் 7: இந்தியா vs ஆஸ்திரேலியா – கேப்டவுன்
  • அக்டோபர் 10: இந்தியா vs பாகிஸ்தான் – ஜோகன்னஸ்பர்க்
  • அக்டோபர் 14: இந்தியா vs ஆப்கானிஸ்தான் – ட்ஷ்வானே
  • அக்டோபர் 17: இந்தியா vs Qualifier A – ப்ளூம்ஃபோன்டெய்ன்
  • அக்டோபர் 24: ஜிம்பாப்வே vs இந்தியா – விக்டோரியா ஃபால்ஸ்

𝙈𝘼𝙍𝙆 𝙔𝙊𝙐𝙍 𝘾𝘼𝙇𝙀𝙉𝘿𝘼𝙍𝙎 🗓️

The ICC Men’s #CWC27 fixtures have been unveiled 🏆

Access the ticket ballot 🎫 https://t.co/MSLEQzcObb pic.twitter.com/dpTE4TEjO7

— ICC (@ICC) October 1, 2026

Super 7 சுற்றில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

இந்தியா Group Stage-ல் தகுதி பெற்று Super 7 சுற்றுக்கு சென்றால், அங்கு மற்ற குழுவில் இருந்து தகுதி பெறும் அணிகளையும் எதிர்கொள்ளும்.

அட்டவணையின்படி இந்தியா Super 7-க்கு தகுதி பெற்றால், அக்டோபர் 28-ம் தேதி ஆஸ்திரேலியாவையும், அக்டோபர் 31-ம் தேதி தென்னாப்பிரிக்காவையும், நவம்பர் 4-ம் தேதி நியூசிலாந்தையும் எதிர்கொள்ளும்.

அதன்பிறகு நவம்பர் 7-ம் தேதி பாகிஸ்தானையும், நவம்பர் 11-ம் தேதி இங்கிலாந்தையும், நவம்பர் 14-ம் தேதி இலங்கையையும் இந்தியா எதிர்கொள்ளும். இந்த Super 7 போட்டிகளுக்குப் பிறகு புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள்தான் அரையிறுதிக்கு செல்லும்.

அரையிறுதி, இறுதிப் போட்டி எப்போது?

Super 7 சுற்று நவம்பர் 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு நவம்பர் 17-ம் தேதி கேப்டவுனிலும், நவம்பர் 18-ம் தேதி ட்ஷ்வானேயிலும் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன.

உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நவம்பர் 21, 2027 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டிக்கு நவம்பர் 22-ம் தேதி ரிசர்வ் நாளாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2027 உலகக் கோப்பை முழுவதும் 57 போட்டிகள் நடைபெறுகின்றன. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய 3 நாடுகளில் உள்ள 12 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த முறை 14 அணிகள் பங்கேற்பதால், போட்டித் தொடரை மூன்று கட்டங்களாக நடத்தும் புதிய முறையை ICC அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக Group Stage-க்குப் பிறகு மீண்டும் 7 அணிகள் மோதும் Super 7 சுற்று இருப்பது இந்த உலகக் கோப்பையின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer