SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

CSK Trade: ரூ. 10 கோடிக்கு தரமான ஆல்-ரவுண்டர்.. குஜராத் உடன் ஓகேயான டீல்?

CSK Latest Trade Update: 2027 ஐபிஎல் தொடருக்காக சாய் கிஷோரை குஜராத் டைட்டன்ஸ் அணியிடமிருந்து ரூ.10 கோடிக்கு டிரேட் முறையில் மீண்டும் வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Written By R Balaji
Published: Nov 24, 2026, 14:13 IST | Updated: Nov 24, 2026, 14:16 IST
Join

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2027 ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. புதிய பயிற்சியாளராக ஜாகீர் கானை நியமித்துள்ளனர். இதையடுத்து ஓய்வு அறிவித்த தோனியை அணியின் மெண்டாராக நியமித்துள்ளனர். தற்போது அணிக்கு தேவைப்படும் தரமான வீரர்களை வாங்க முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை நிரப்ப தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவீந்திர ஜடேஜா இல்லாமல் 2026 ஐபிஎல் தொடரில் கடும் பின்னடைவை சந்தித்தனர். இதனால் 2027 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக அந்த இடத்தில் ஒரு தரமான ஆல்-ரவுண்டரை வாங்க வேண்டும் என்ற முனைப்பில் மற்ற அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல் கட்டமாக அக்சர் படேலுக்காக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கடைசி நேரத்தில் டெல்லி கேபிடல்ஸ் உரிமையாளர் இந்த டீல் வேண்டாம் என கூறிவிட்டார். 

சாய் கிஷோரை கொடுக்க குஜராத் தயார்

இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் சாய் கிஷோருக்காக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சாய் கிஷோர் மற்றும் ககிசோ ரபாடா தருகிறோம், நீங்கள் ருதுராஜ் கெய்வாட்டை தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். இதன் காரணமாக இப்பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்து வந்தது.

இந்த நிலையில், சாய் கிஷோரை வீரர் பறிமாற்றமாக இல்லாமல் பணத்திற்காக கொடுக்க குஜராத் டைட்டன்ஸ் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாய் கிஷோர் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தே தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கினார். 2020, 2021 ஐபிஎல் சீசன்களில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அவர், ரூ. 20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதன்பிறகு 2022 ஆம் ஆண்டு ரூ. 3 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாறினார். பின்னர் 2025 ஆம் ஆண்டின்போது ரூ. 2 கோடிக்கு அவரை குஜராத் அணி தக்கவைத்து கொண்டது.

ஆனால் சாய் கிஷோருக்கு தொடர்ச்சியான வாய்ப்பை குஜராத் அணி வழங்கவில்லை. ரஷித் கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இருந்ததால் சாய் கிஷோருக்கு பிளேயிங் 11ல் இடம்பிடிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. தற்போது மனவ் சுதாரும் இருப்பதால் போட்டி மேலும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில்தான், சாய் கிஷோர் அந்த அணியில் இருந்து வெளியேற விரும்புவதாகவும், சென்னை அணிக்கு சென்றால் தனக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும் என அவர் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

சிஎஸ்கே அணிக்கு வந்து அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவருக்கு இந்திய டி20 அணியிலும் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும். சமீபத்தில் நமன் தீர் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்தி இந்திய டி20 அணியில் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். இதேபோன்று சாய் கிஷோருக்கும் போதிய வாய்ப்புகள் கிடைத்தால் அவராலும் தனது திறமையை நிரூபிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் சூழல் அவருக்குப் பழக்கமானது என்பதால், சிஎஸ்கே அணிக்கு மாறுவது சாதகமாக அமையலாம் எனக் கருதப்படுகிறது.

ரூ. 10 கோடி சம்பளத்துடன் வரும் சாய் கிஷோர்

இதற்கிடையே, சாய் கிஷோரை மீண்டும் சென்னை அணிக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ரூ.2 கோடிக்கு குஜராத் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள அவரை விடுவிக்க, ரூ.10 கோடி வழங்க வேண்டும் என அந்த அணி நிர்வாகம் கேட்டுள்ளதா கூறப்படுகிறது. இந்த தொகைக்கு சிஎஸ்கே நிர்வாகமும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் சாய் கிஷோர் சென்னை அணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்கள் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரி மாதம் வரை நீட்டித்து ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, சாய் கிஷோரின் அணி மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES