SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

நியூசிலாந்தை காலி செய்த திலக் - நிதிஷ் ஜோடி... இந்திய அணி மிரட்டல் வெற்றி

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20ஐ போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாச்சத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.

Written By Sudharsan G
Published: Oct 24, 2026, 04:16 PM IST | Updated: Oct 24, 2026, 05:55 PM IST
Join

IND vs NZ 2nd T20I: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20ஐ போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாச்சத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி20ஐ தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20ஐ போட்டியை இந்திய அணி வென்ற நிலையில், முதல் போட்டி நடந்த அதே கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் 2வது டி20ஐ போட்டி இன்று நடைபெற்றது.

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவுக்கு அடி... இந்தியாவுக்கு ஜாக்பாட்! WTC இறுதிப்போட்டி வாய்ப்பு யாருக்கு? Explainer

181 ரன்கள் இலக்கு

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. இஷான் கிஷன், மயங்க் யாதவ் ஆகியோருக்கு பதில் வைபவ் சூர்யவன்ஷி, பிரின்ஸ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து அணியில் ஆடம் மில்னே பதிலாக ஜேக்கப் டஃப்பி சேர்க்கப்பட்டார்.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி பவர்பிளேவில் 43 ரன்களை அடித்து மூன்று விக்கெட்டை இழந்தது. 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ் - பெவன் ஜேக்கப்ஸ் ஜோடி 116 ரன்களை சேர்த்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை எடுத்தது.

மிரட்டிய சான்டனர்

பிலிப்ஸ் 70 ரன்களையும், பெவன் ஜேக்கப்ஸ் 58 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 2; புவனேஷ்வர் குமார், பிரின்ஸ் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 181 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. 4.4 ஓவர்களில் 40 ரன்களை எடுத்திருந்த போது, சஞ்சு சாம்சன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மேலும் படிக்க | ரூ. 20 கோடி டிரேடிங் ஆசை... ஹர்திக் பாண்டியா மீது பிசிசிஐ அதிருப்தி? முழு விவரம்

வைபவ் சூர்யவன்ஷி 4, அபிஷேக் சர்மா 27, ஷ்ரேயாஸ் ஐயர் 7, அக்சர் பட்டேல் 11 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். நமன் திர் அதிரடியாக விளையாடி இந்திய அணியை ஓரளவு மீட்டார். இருப்பினும் அவரது விக்கெட்டை சான்ட்னர் எடுத்தார். சான்ட்னர் 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

திலக் வர்மா - நிதிஷ் குமார் மிரட்டலடி

கடைசி மூன்று ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 48 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் திலக் வர்மா - நிதிஷ் குமார் ரெட்டி இருந்தனர். ஹைதராபாத் பாய்ஸ் இந்த போட்டியை முடித்துக்கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. நினைத்தபடியே இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ஆட்டத்தை முடித்துவைத்தனர்.

18வது ஓவரில் 17 ரன்கள், 19வது ஓவரில் 18 ரன்களை அடிக்க கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதையும் எளிதாக அடித்து இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

திலக் வர்மா 26 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20ஐ போட்டி வெல்லிங்டன் நகரில் வரும் அக். 27ஆம் தேதி நடைபெறும்.

மேலும் படிக்க | RCB செய்யப்போகும் அதிரடி மாற்றம்.. 7 வீரர்களை விடுவிக்க திட்டம்? அடுத்த கேப்டன் இவர்தான்!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES