• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /Explained: கோடிக்கணக்கில் சொத்து இருக்கு.. எம்எல்ஏக்களுக்கும் கார் அவசியமா? சம்பளம் வேற இதுல!

Explained: கோடிக்கணக்கில் சொத்து இருக்கு.. எம்எல்ஏக்களுக்கும் கார் அவசியமா? சம்பளம் வேற இதுல!

CM Vijay MLA Car Explained: ஒவ்வொரு எம்எல்ஏவிற்கு அரசு சார்பில் கார் மற்றும் தனியாக உதவியாளர் ஒருவர் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வரவேற்பை கொடுத்தாலும், இன்று பல எம்எல்ஏக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கார்களும், கோடிக்கணக்கில் சொத்துகளை வைத்துள்ளனர். எனவே, அவர்களுக்கு எதற்கு தனியாக ஒரு கார் என்ற கேள்வி எழுகிறது.

Written ByUmabarkavi K
Published: Aug 20, 2026, 06:05 PM IST|Updated: Aug 21, 2026, 04:33 PM IST
joinshare
Explained: கோடிக்கணக்கில் சொத்து இருக்கு.. எம்எல்ஏக்களுக்கும் கார் அவசியமா? சம்பளம் வேற இதுல!
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

2

பழைய கடனைப் புதுப்பித்தாலும் ரூ.10,000 கிடைக்குமா? கூட்டுறவு வங்கியின் புதிய விதிகள் சொல்வது என்ன?

3

DLC: ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே IPPB மூலம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி?

4

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை!

5

பயிற்சியாளரை கழட்டிவிட்ட CSK... அதிரடி மாற்றம் - 15 வருட உறவு முறிந்தது

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

CM Vijay MLA Car Explained: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் 110 விதியின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், நேற்று (ஆகஸ்ட் 19) அவர் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. 

அதாவது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார், உதவியாளர் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதுதான் தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது. கஜானா காலி என்று கூறி வரும் முதல்வர் விஜய், இந்த திட்டத்தை கொண்டு வருவது சரியா என கேள்வி எழுப்புகின்றனர்.

அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார்

பொருளாதார பலமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதல் முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றித் தொடர்வதற்கும். அவர்கள் தங்களின் தொகுதிப் பணிகளைத் திறம்பட வசதியாக சட்டமன்ற மேற்கொள்வதற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக சட்டமன்ற உறுப்பினர்கள் உதவியாளரை நியமித்துக் கொள்வது அவசியம் ஒரு கருதப்படுகிறது.

எனவே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூபாய் 75,000 வாகனப் படியாகவும், அலுவலகப் பணிகளில் உதவிசெய்ய ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூபாய் 25,000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக அரசு சார்பில் வாகனம், வாகனப் படி மற்றும் உதவியாளர் படி வழங்கும்… pic.twitter.com/XarilJNRWy

— CMOTamilNadu (@CMOTamilnadu) August 19, 2026

 

அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார் அவசியமா?

தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் சபாநாயகர், துணை சபாநாயகருடன் சேர்த்து 225 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களின் தவெக எம்எல்ஏக்கள் முதல்வர் விஜய்யுடன் சேர்த்து 108 பேர் இருக்கின்றனர்.  

கட்சிஎம்எல்ஏக்கள் எண்ணிக்கை
தவெக108
திமுக     59
அதிமுக 41
காங்கிரஸ்  5
விசிக   2
தேமுதிக   1
பாஜக1
பாமக   4
ஐயூஎம்எல் 2
கம்யூனிஸ்ட்4

தமிழக சட்டப்பேரவையில் இத்தனை எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அனைத்து  எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதில் 108 முதல்முறை எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் பலருக்கும் தனிப்பட்ட முறையில் கார் இல்லை என கூறப்படுகிறது. 

தமிழகத்தில் ஏற்கனவே கடன், நிதி சுமை அதிகமாக இருப்பதாக முதல்வர் விஜய் மேடைக்கு மேடை கூறி வருகிறார். இப்படி இருக்கையில், முதல்வர் விஜய்  அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் தேவையா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

சட்டப்பேரவையில் பாதிக்கு பாதி எம்எல்ஏக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள், கோடிக்கணக்கில் சொத்து, நிலம், வீடு போன்றவற்றை வைத்துள்ளனர். குறிப்பாக, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அதிக அளவில் கார்களை வைத்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, தவெகவில் கனிமொழி, முருகன், ரேவந்த் உள்ளிட்ட பல எம்எல்ஏக்கள் சொந்தமாகவே பல கார்களை வைத்துள்ளனர்.  எனவே, அவர்களுக்கு எதுக்கு அரசின் கார், ரூ.75,000 மாதப்படி, உதவியாளருக்கு ரூ.25,000 சம்பளம் ஏன் என்ற கேள்வி எழுகிறது. 

உண்மையிலேயே, கார் கூட வைத்திருக்காத முதல் முறை எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது நியாயமானதாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். எனவே, இதனை பில்டர் செய்து, முதல்வர் விஜய் கார் வழங்குவது  சரியானதாக இருக்கும் என கருதுகின்றனர்.

யாருக்கு கார் வழங்கக் கூடாது?

திமுக மருத்துவர் அணிச் செயலாளர் எழிலன் கூறுகையில், கஜானா காலி எனக் கூறிவிட்டு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவிக்கின்றனர். கார் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கார் வழங்க வேண்டும். தேர்தல் வேட்புமனுவில் கார் இருப்பதாக தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கக் கூடாது. 

நமது சட்டப்பேரவையில் உள்ள 234 எம்எல்ஏக்களில் 190 எம்எல்ஏக்கள் கோடிகளில் சொத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏழை, எளிய சாமானியர்களை சட்ட மன்றத்துக்குள் கொண்டு வந்திருப்பதாக சொல்லும் முதல்வர் விஜய், யார் கார் வைத்துள்ளனர், கார் இல்லை என வேறுபடுத்தி பார்த்து கார் வழங்கினால் உகந்ததாக இருக்கும்" என்றார்.

மேலும், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், "மகிழுந்து இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு மகிழுந்து வழங்கினால்கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?

ஒரு மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் 30 இலட்சம் என்றாலும் 70 கோடி தேவைப்படுகிறது அதைத்தவிர, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் 234 உறுப்பினர்களுக்கும் வழங்குவதால் மேலும் ஆண்டிற்கு 28 கோடி ரூபாய் தேவை. 

ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு இலட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன?" என கேள்வி எழுப்பினார்.

எம்எல்ஏக்கள் சம்பள விவரம்

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள விவரத்தை பார்ப்போம்.  முன்பு  ரூ.1,05,000 லட்சம் வரை மாத சம்பளமாக எம்எல்ஏக்கள் பெற்று வந்த நிலையில், தற்போது ரூ.1,80,000 பெறுவார்கள். அதன்படி,

  • எம்எல்ஏக்களுக்கு மாதம் அடிப்படை ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படுகிறது.
  • எம்எல்ஏக்களுக்கு மாதாந்திரப்படியாக ரூ.10,000 வழங்கப்படுகிறது.
  • எம்எல்ஏக்களுக்கு தொகுதிப்படியாக ரூ.25,000 வழங்கப்படுகிறது.
  • எம்எல்ஏக்களுக்கு மாதந்தோறும் அஞ்சல்படியாக ரூ.2,500 வழங்கப்படுகிறது.
  • எம்எல்ஏக்களுக்கு மாதந்தோறும் தொலைபேசிப்படியாக ரூ.5,000 வழங்கப்படுகிறது.
  • எம்எல்ஏக்களுக்கு மாதந்தோறும் தொகுப்புப்படியாக ரூ.5,000 வழங்கப்படுகிறது.
  • எம்எல்ஏக்களுக்கு வாகனப்படியாக மாதற்தோம் ரூ.75,000 இனி வழங்கப்படும்.
  • எம்எல்ஏக்களுக்கு மாதந்தோறும் உதவியாளர் படியாக ரூ.25,000 இனி வழங்கப்படும்.

தற்போது, வாகனப்படியாக ரூ.25,000 மட்டுமே அனைத்து எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், நேற்று விஜய் வெளியிட்ட அறிவிப்பின்படி, வாகனப்படி ரூ.75,000, உதவியாளர் படி ரூ.25,000 கூடுதலாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத சம்பளம் ரூ.1,80,000 கூடுதலாக பெற உள்ளனர்.  பழைய ஊதியத்தில் இருந்து ரூ.75,000 கூடுதலாக பெற உள்ளனர்.

தற்போது எம்எல்ஏக்கள் ரூ.1.05 லட்சம் சம்பளம் வாங்கும் நிலையில், சொத்து மதிப்பில் கார் இல்லை என குறிப்பிட்ட எம்எல்ஏக்களுக்கு மட்டும் அரசு சார்பில் கார் வழங்கினால் சிறப்பானதாக இருக்கும் கருதுகின்றனர். இதனை முதல்வர் விஜய் செவிசாய்ப்பாரா இல்ல அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Vijay Thalapathy
Explainer