SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழகத்தை நோக்கி வரும் ’முரசு' புயல்? அடுத்த 3 நாட்களுக்கு உஷார்! கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் அலர்ட்

TN Weather Latest Update: வங்கக்கடலில் நாளை (அக்டோபர் 23) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதீஉருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை வெளுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 22, 2026, 08:47 AM IST | Updated: Oct 22, 2026, 08:58 AM IST
Join

TN Weather Latest Update:  தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்  கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டி தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி  ஏற்கனவே உருவாகி உள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புயல்?

மேலும், அக்டோபர் 23ஆம் தேதியான நாளை தென்கிழக்கு மற்றும் அதனையொட்டி கிழக்கு மத்திய வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இது புயலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு புயலாக மாறும் பட்சத்தில் அந்த புயலுக்கு முரசு என பெயர் சூட்டப்படலாம் என கூறப்படுகிறது.

முரசு என்ற பெயர் தமிழ் பெயராகும். இருப்பினும், முரசு என்ற தமிழ் பெயருக்கு முன்னதாக 'அர்னாப்’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வங்கக்கடலில் ஆழ்த்த காற்றழத்த உருவானது. அதற்கு அர்னாப் எனற பெயர் சூட்டடப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக  அப்பெயர் சூட்டப்படவில்லை.

இதனால், அடுத்த புயலின் பெயர் அர்னாப்பா அல்லது முரசா என்ற குழப்பம் நீடிக்கிறது.  ஆனால், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அர்னாப் என்றே குறிப்பிடுகிறார். இதுகுறித்து சென்னை வானிலை மையம் இயக்குநர் துறை நேற்று கூறுகையில், "காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினால் மாறினால்  அதன் தாக்கம் தமிழகத்திற்கு குறைவாக உள்ளது. அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் அதிக புயல் சின்னங்கள் உருவாகுவது வழக்கம்" எனக் கூறினார்.

மேலும் படிக்க: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - எங்கெல்லாம் ஆரஞ்சு அலர்ட்?

இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

சென்னை வானிலை மையம் அறிவிப்பின்படி, அக்டோபர் 22ஆம் தேதியான இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

திருச்சிராப்பள்ளி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

வெதர்மேன் அலர்ட்

 

தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "அடுத்த 3 நாட்களும் தமிழகம் முழுவதற்கும் மிகவும் சாதகமான சூழல் நிலவுகிறது. வழக்கம்போல, சென்னைக்கு அதன் பங்கைக் காட்டிலும் கூடுதல் மழை கிடைக்க வாய்ப்புள்ளது. அக்டோபர் 22ஆம் தேதியான இன்று  தெற்கு மற்றும் மேற்குத் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், அப்பகுதிகள் முக்கிய பாதிப்புக்குள்ளாகும் இடங்களாக இருக்க வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட பிற தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, கரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

உள்மாவட்டங்கள் முதல் கடலோரப் பகுதிகள் வரை, மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களிலும் கணிசமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் இன்று முதல் பகல் நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் பகல் நேரத்தில்கூட, திடீரென குறுகிய காலத்திற்கு பலத்த மழை பெய்யக்கூடும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அதிகாலையில் தடம் புரண்ட ரயில் எஞ்சின்... தண்டவாளத்தில் நிலச்சரிவால் பாதிப்பு
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES