• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தீபாவளி தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணபிப்பது எப்படி? முழு விவரம்

தீபாவளி தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணபிப்பது எப்படி? முழு விவரம்

Diwali firecracker shop license : தீபாவளி தற்காலிக பட்டாசு உரிமம் பெறுவது தொடர்பாக வேலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு. விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 28, 2026, 02:45 PM IST|Updated: Sep 28, 2026, 02:52 PM IST
joinshare
தீபாவளி தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணபிப்பது எப்படி? முழு விவரம்
Image Credit: Diwali Temporary Firecracker Shop License

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Diwali firecracker shop license : வேலூர் மாவட்டத்தில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிகமாகப் பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் இ-சேவை மையங்கள் மூலமாக இணையவழியில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.  

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி

தற்காலிகப் பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 18.10.2026 ஆகும். அறிவிக்கப்பட்ட இந்தக் கடைசி தேதிக்குப் பின்னர் ஆன்லைனில் பெறப்படும் எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.  

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது கீழ்க்காணும் ஆவணங்களை இணைக்க வேண்டும்: 
 
* கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்திற்கான வரைபடம்.   
* கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம்; வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப்பத்திரம் மற்றும் உரிமத்தினைக் காட்டும் ஆவணம்.   
* உரிமத்திற்கான கட்டணம் ரூ.500-ஐ அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் இ-சலான்.   
* இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை.   
* வரி ரசீது.   
* விண்ணப்பதாரரின் 2 புகைப்படங்கள்  

உரிமம் வழங்கும் நடைமுறை

ஆன்லைனில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மூலமாக உரிய கள விசாரணைக்கு உட்படுத்தப்படும். விசாரணை முடிவுற்றதும், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரம் ஆன்லைன் மூலமாகவே தெரிவிக்கப்படும்.  

விண்ணப்பம் ஏற்கப்பட்டவர்கள், தற்காலிக உரிமத்தின் ஆணையினை தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இ-சேவை மையங்கள் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இந்த வழிமுறையானது தற்காலிக உரிமம் பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்; நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்விதிமுறைகள் பொருந்தாது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu