• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்புக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்புக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்

Tamil Nadu Bypolls 2026: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டள்ளது. அதாவது, கருத்துக் கணிப்பு தெடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Sep 17, 2026, 11:21 AM IST|Updated: Sep 17, 2026, 11:33 AM IST
joinshare
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்புக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Bypolls 2026: தமிழகத்தில் அக்டோபர் 6ஆம் தேதி தாராபுரம், மதுராந்தகம்  தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 16ஆம் தேதி (நேற்றுடன்) முடிவடைந்தது. வேட்பு மனு பரிசீலினை செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடந்து, அன்றைய தினமே இடைதேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் கருத்துக்கணிப்புகளை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கருத்துக்கணிப்புகளுக்கு தடை

35.மதுராந்தகம் (தனி) மற்றும் 101.தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் டைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு 06.10.2026 அன்று காலை 7.00 மணி தல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். மேற்காணும் டைத்தேர்தல்களின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய / பிந்தைய கருத்துக் னிப்புகளின் முடிவுகளை வெளியீடுதலுக்கும் பரப்புதலுக்கும் சில அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி,

1951ஆம் ஆண்டு. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126Aஆம் பிரிவின் விதித்துறைகளின்படி, (1) யாதொரு நபரும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில், அது எதுவாயினும், பரப்பவோ கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தினால் இதுசம்பந்தமாக அறிவிக்கப்படலாம்.

ஒரு பொதுத் தேர்தலின்போது. வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம். 

மேலும் படிக்க: EX மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்.. யார் இவர்

ஓர் இடைத்தேர்தல் அல்லது பல இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் மற்றும் வாக்குப்பதிவின் முதல் நாளிலிருந்து வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம். 

தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

பல இடைத்தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் ஒன்றாக நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப்பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொடரலாம். இப்பிரிவின் விதிமுறைகளை மீறும், யாதொரு நபரும் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126A ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு. மேற்சொன்ன பிரிவின். (2)(b)ஆம் உட்பிரிவின் விதித்துறைகள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம். 06.10.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 7.00 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது (அது எதுவாயினும்) ஆகியவை தடை செய்யப்பட வேண்டிய கால அளவாக இதனால் அறிவிக்கிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126(1)(b) ஆம் பிரிவின்கீழ், மேற்காணும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும். எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் படிக்க: 2024 முதல் 2026 வரை... டெங்கு பாதிப்பு நிலவரம் என்ன? - தமிழ்நாடு அரசின் விளக்கம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu