• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வீடு, நிலம் வாங்குவோருக்கு நற்செய்தி: பத்திரங்கள் இனி உடனே கைக்குக் கிடைக்கும்!

வீடு, நிலம் வாங்குவோருக்கு நற்செய்தி: பத்திரங்கள் இனி உடனே கைக்குக் கிடைக்கும்!

Tamil Nadu Government : தமிழக பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி மாற்றம். ரூ.5 கோடி வரையிலான கட்டிடங்களுக்கு இனி நேரில் கள ஆய்வு இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 11, 2026, 07:06 AM IST|Updated: Sep 11, 2026, 07:15 AM IST
joinshare
வீடு, நிலம் வாங்குவோருக்கு நற்செய்தி: பத்திரங்கள் இனி உடனே கைக்குக் கிடைக்கும்!
Image Credit: Tamil Nadu Government

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Government : தமிழகத்தில் நிலம், வீடு மற்றும் கட்டிடங்களை கிரையம் உள்ளிட்ட உரிமை மாற்றம் செய்து சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யும்போது, கட்டிட மதிப்பை ஆய்வு செய்வதற்காக சார்பதிவாளர்கள் நேரில் சென்று களப்பணி மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக, ரூ.50 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள கட்டிடங்களுக்கு இத்தகைய களப்பணி கட்டாயமாக இருந்ததால், ஆவணங்கள் உடனடியாகக் கைக்குக் கிடைக்காமல் பல வாரங்கள் காலதாமதம் ஏற்படுவதாகப் பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

ரூ.5 கோடி வரை களப்பணிக்கு விலக்கு:

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலும், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி விரைவாகப் பத்திரங்களைப் பெற்றுச்செல்லும் வகையிலும் பதிவுத்துறை தலைவர் அலுவலகம் புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி ரூ.5 கோடி வரையிலான கட்டிடங்களுக்குச் சார்பதிவாளர்கள் நேரில் சென்று களப்பணி ஆய்வு செய்யத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, அதற்கான உரிய ஆவணங்களையும் கட்டணங்களையும் ஆவணதாரர்கள் முறையாகச் சமர்ப்பித்தால் உடனடியாகப் பத்திரங்கள் விடுவிக்கப்படும்.

மதிப்பீட்டு விதிமுறைகளும் நிபந்தனைகளும்:

புதிய வழிகாட்டுதலின்படி, ரூ.1 கோடிக்குக் குறைவான மதிப்புடைய கட்டிடங்களுக்கு, ஆவணதாரர் சுய சான்றளிக்கும் மதிப்பு அல்லது பொதுப்பணித்துறையின் தளவிலை சதுரடி மதிப்பு ஆகியவற்றில் எது அதிகமோ, அதற்கான முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக் கட்டணத்தைச் செலுத்த உறுதிமொழி அளிக்க வேண்டும். அதேபோல், ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான கட்டிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சார்ட்டர்ட் இன்ஜினியர் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். அந்த மதிப்பீடு அல்லது PWD சதுரடி மதிப்பில் எது அதிகமோ, அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தினால் களப்பணி இன்றி உடனடியாக ஆவணம் வழங்கப்படும்.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தளர்வு:

அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொறுத்தவரை, 2,500 சதுரடிக்குக் குறைவான பரப்பளவு கொண்ட கட்டிடங்களுக்குச் சுய சான்றிதழ் அல்லது PWD மதிப்பீடும், 2,500 சதுரடிக்கு அதிகமான பரப்பளவுக்குச் சார்ட்டர்ட் இன்ஜினியர் மதிப்பீடும் அடிப்படையாகக் கொள்ளப்படும். எவ்வாறாயினும், அதிகபட்ச மதிப்பீட்டிற்குரிய கட்டணத்தை ஏற்க ஆவணதாரர் மறுக்கும் பட்சத்தில் மட்டுமே களப்பணிக்கு ஆவணம் பரிந்துரைக்கப்படும்.

புகைப்படங்கள் கட்டாயம்:

கட்டிடங்கள் மறைக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், ஆவணங்களை தாக்கல் செய்யும்போது அந்தக் கட்டிடத்தின் புவிசார் குறியீடு (Geo-coordinates) அடங்கிய புகைப்படங்களை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேநேரம், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள், கல்லூரிகள் போன்ற சிறப்புத் தன்மை வாய்ந்த பெரிய வணிகக் கட்டிடங்களுக்கு முந்தைய ஆய்வுக் கட்டுப்பாடுகளே தொடரும் எனப் பதிவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu