தமிழ்நாட்டை பொருத்தவரை, ஆங்கிலம்-தமிழ் என இருமொழி கொள்கை மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. ஆளும் கட்சியாக இருக்கும் தவெக அரசும், அதைத்தான் பின்பற்றி வருகிறது. இந்த சமயத்தில், தமிழ்நட்டில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவரில், தமிழ்-ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, கரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரை கவரில், இந்தி மொழி இடம் பெற்றிருந்ததாக ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகி வந்தது.
ஏற்கனவே, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் நசரேத் இடையேயான மாநில நெடுஞ்சாலையில், புதிதாக நிறுவப்பட்டிருக்கும் வழிகாட்டு பலகையில், ஊர்களின் பெயர் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழியில் எழுதப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மாத்திரை கவரிலும் இப்படி இருந்ததால், தவெக அரசை திமுக உட்பட பிற கட்சிகளின் அரசியல் தலைவர்கள் கடுமையாக சாடினர்.
#தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளது போல ! முதலில் கரூர்... இப்போது கோவையிலும் அதே நிலமை... #HindiImposition #TvkFailsTN #Tvk https://t.co/N2o9ikE8VO
— Dr. T R B Rajaa (@TRBRajaa) October 6, 2026
மாத்திரை கவரில் இந்தி மொழி இடம்பெற்றிருந்த சர்ச்சைக்கை, தவெக அரசின் ஐடி விங் பக்கத்தில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இந்த மாத்திரை கவர்கள், திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் அடிக்கப்பட்டவைதான் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பதிவில், பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவரில் இந்தியுடன் மும்மொழி இடம்பெற்றதாக தீயசக்திக் கூட்டம் கொதித்துக் குதித்துக் கூப்பாடு போடுகிறது. நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இயங்கும் மனசாட்சி உள்ள மக்களாட்சி இப்படி ஒரு மும்மொழி மோசடியை ஒருநாளும் செய்யாது. மொழிக்கொள்கையைப் பொறுத்தவரை அண்ணாவின் இருமொழிக் கொள்கையே நம் த.வெ.க. அரசின் சமரசமற்ற ஒரே நிலைப்பாடு.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவரில் இந்தியுடன் மும்மொழி இடம்பெற்றதாக தீயசக்திக் கூட்டம் கொதித்துக் குதித்துக் கூப்பாடு போடுகிறது. நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இயங்கும் மனசாட்சி உள்ள மக்களாட்சி இப்படி ஒரு மும்மொழி மோசடியை ஒருநாளும் செய்யாது. மொழிக்கொள்கையைப் பொறுத்தவரை அண்ணாவின் இருமொழிக் கொள்கையே நம் த.வெ.க. அரசின் சமரசமற்ற ஒரே நிலைப்பாடு. உண்மை என்னவெனில், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியில்தான் கடந்த 2025 டிசம்பர் மாதம் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்ட ஆணை மூலம் ஈரோடு கூட்டுறவு சங்க அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட மாத்திரை கவரில்தான் இந்தியும் இடம்பெற்றுள்ளது. அதை மூடி மறைத்து, தாய்மொழி காப்பதுபோல முகமூடி வேடம் போட்டு தீயசக்தி தி.மு.க. மொழிகாக்கும் மூலசக்திபோல குதித்து நாடகம் ஆடுகிறது. இந்த உண்மையை, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரே தெளிவுபடுத்தி உள்ளார். 1996ல் ஆட்சி அமைத்த தீயசக்தி தி.மு.க., அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்படியான இந்திய அரசியல் சாசனப் புத்தகம் தரப்பட்டது என 2001ல் ஆட்சிக்கு வந்தபோது, சட்டமன்றத்திலேயே அப்போதைய முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அந்தப் புத்தகத்தையே அவையில் காட்டி தீயசக்தி தி.மு.க.வின் முகத்திரையைச் சுக்கு நூறாகக் கிழித்ததுதான் சட்டமன்றப் பேரவை வரலாறு. அன்றைக்கு தி.மு.க. சார்பாகப் பதிலளித்த மதிப்பிற்குரிய மாண்புமிகு பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அப்படி நடந்திருந்தால் அது தவறுதான் என்று கூறியதும் சபைக்குறிப்பில் இருப்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது. ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் இந்திக்குப் பக்க வாத்தியம் வாசித்துவிட்டு, ஆட்சி பறிபோனதும் மண்,மொழி,இனம், மானம் காக்கும் உத்தமர் போல வேடம் போட்டுக் குதிப்பதும், பின்னர் குட்டு உடைந்து குப்புற விழுந்து மூக்குடைபடுவதும் வாடிக்கை என்பதுதான் தீயசக்தி தி.மு.க.வின் வரலாறு.
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) October 6, 2026
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு! 6,574 காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி?
உண்மை என்னவெனில், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியில்தான் கடந்த 2025 டிசம்பர் மாதம் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்ட ஆணை மூலம் ஈரோடு கூட்டுறவு சங்க அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட மாத்திரை கவரில்தான் இந்தியும் இடம்பெற்றுள்ளது. அதை மூடி மறைத்து, தாய்மொழி காப்பதுபோல முகமூடி வேடம் போட்டு தீயசக்தி தி.மு.க. மொழிகாக்கும் மூலசக்திபோல குதித்து நாடகம் ஆடுகிறது. இந்த உண்மையை, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரே தெளிவுபடுத்தி உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து, “1996ல் ஆட்சி அமைத்த தீயசக்தி தி.மு.க., அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்படியான இந்திய அரசியல் சாசனப் புத்தகம் தரப்பட்டது என 2001ல் ஆட்சிக்கு வந்தபோது, சட்டமன்றத்திலேயே அப்போதைய முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அந்தப் புத்தகத்தையே அவையில் காட்டி தீயசக்தி தி.மு.க.வின் முகத்திரையைச் சுக்கு நூறாகக் கிழித்ததுதான் சட்டமன்றப் பேரவை வரலாறு. அன்றைக்கு தி.மு.க. சார்பாகப் பதிலளித்த மதிப்பிற்குரிய மாண்புமிகு பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அப்படி நடந்திருந்தால் அது தவறுதான் என்று கூறியதும் சபைக்குறிப்பில் இருப்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது.
ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் இந்திக்குப் பக்க வாத்தியம் வாசித்துவிட்டு, ஆட்சி பறிபோனதும் மண்,மொழி,இனம், மானம் காக்கும் உத்தமர் போல வேடம் போட்டுக் குதிப்பதும், பின்னர் குட்டு உடைந்து குப்புற விழுந்து மூக்குடைபடுவதும் வாடிக்கை என்பதுதான் தீயசக்தி தி.மு.க.வின் வரலாறு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.