• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /மதுராந்தகம் : அக்டோபர் 6 விடுமுறை! ஊதியம் வழங்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவு

மதுராந்தகம் : அக்டோபர் 6 விடுமுறை! ஊதியம் வழங்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவு

Madurantakam : மதுராந்தகம் இடைத்தேர்தல் நடக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி, தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க உத்தரவு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புகார் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 27, 2026, 06:55 AM IST|Updated: Sep 27, 2026, 07:02 AM IST
joinshare
மதுராந்தகம் : அக்டோபர் 6 விடுமுறை! ஊதியம் வழங்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவு
Image Credit: Madurantakam October 6 holiday

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Madurantakam : செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட  மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இத்தொகுதியில் அனைத்துத் தரப்பு மக்களும் முழுமையாக வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையமும் மாவட்ட நிர்வாகமும் தீவிர ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. தொகுதி முழுவதும் பறக்கும் படைகளின் தீவிர வாகனச் சோதனைகள், வாக்குச்சாவடிகள் தயார்படுத்துதல் மற்றும் மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்துதல் எனப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  

இந்த இடைத்தேர்தல் ஏன் நடக்கிறது?

இத்தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்த மரகதம் குமரவேல், தனது பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்ததையடுத்து, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி காலியானதாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படி, சட்டமன்றத் தொகுதி காலியான தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதால், இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

எப்போது நடக்கிறது?

மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 2026 அக்டோபர் 6-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை தொடங்கி மாலை வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பொதுமக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

யாரெல்லாம் போட்டி போடுகிறார்கள்?

மதுராந்தகம் தனித்தொகுதி இடைத்தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் இடையே பலமுனைப் போட்டி நிலவுகிறது:

திமுக: வழக்கறிஞர் ஐ. பரந்தாமன்
அதிமுக: கணிதா சம்பத்
தவெக: மரகதம் குமரவேல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM): சுகந்தி
நாம் தமிழர் கட்சி: ஜானகிராமன்

இவர்களுடன் சேர்த்து பல சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளதால் வாக்கு சேகரிப்புப் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.

ஊதியத்துடன் விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு

மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றி வாக்குரிமையைச் செலுத்துவதற்கு ஏதுவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

அதன்படி, அப்பகுதியில் இயங்கும் வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து நிர்வாகங்களும், வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 06.10.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய முழு விடுப்பு மற்றும் அதற்குரிய ஊதியத்தை கட்டாயம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

புகார் அளிப்பது எப்படி?

வாக்குப்பதிவு நாளன்று நிறுவனங்களால் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாகப் புகார் அளிக்க செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டக் கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் கீழ்க்கண்ட அதிகாரிகளைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம்:  

ஒருங்கிணைப்பு அலுவலர் (Nodal Officer): கமலக்கண்ணன், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்), செங்கல்பட்டு. தொலைபேசி எண்: 9841016277  

உறுப்பினர்கள்:

தாசரதி, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), காஞ்சிபுரம். தொலைபேசி எண்: 9841208118
சம்பத், தொழிலாளர் துணை ஆய்வர், காஞ்சிபுரம். தொலைபேசி எண்: 8526768823
பௌசி, முத்திரை ஆய்வர், செங்கல்பட்டு. தொலைபேசி எண்: 9025265956  

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu