• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /பாரதிதாசன் விவகாரம் : 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படும்! அமைச்சர் வன்னி அரசு விளக்கம்

பாரதிதாசன் விவகாரம் : 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படும்! அமைச்சர் வன்னி அரசு விளக்கம்

மலேசியாவில் படித்து வரும் மாணவர் பாரதிதாசனின் உதவித்தொகை, இன்னும் 2 நாட்களில் விடுவிக்கப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 18, 2026, 02:26 PM IST|Updated: Sep 18, 2026, 02:34 PM IST
joinshare
பாரதிதாசன் விவகாரம் : 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படும்! அமைச்சர் வன்னி அரசு விளக்கம்
Image Credit: Bharathithasan | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மலேசியாவில் பயின்று வரும் மாணவர் பாரதிதாசன், தனக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டிய தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை என்று சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால், தன்னை பல்கலைக்கழகம் ஆராய்ச்சி படிப்பில் இருந்து வெளியேற்றும் சூழல் நிலவுவதாக கண்ணீர்மல்க கூறியிருந்தார். அதில், அமைச்சர் வன்னி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பாரதிதாசன் முன் வைத்திருந்தார்.

பாரதிதாசன் வைத்த குற்றச்சாட்டுகள்:

தமிழக அரசின் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தமிழகத்தை சேர்ந்த பாரதிதாசன் எனும் மாணவர், மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். இவர், தன்னுடைய இரண்டாம் ஆண்டு படிப்புக்கான கல்வி உதவித்தொகையை அரசு விடுவிக்கவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து, இதற்கு சமூக நீதி துறை அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்திருந்தார். இதன் பிறகும் தனக்கு இன்னும்வந்து சேர வேண்டிய உதவித்தொகை சேரவில்லை என்று கூறிய அவர், இதனால் பல்கலைக்கழகம் தன் படிப்பை நிறுத்தி வெளியே அனுப்பும் சூழல் நிலவுவதாகவும் கூறினார்.

அமைச்சர் வன்னி அரசு குறித்து பேசிய அவர், “என் மீது தனிப்பட்ட வெறுப்பு இருந்தாலோ, நான் படிக்க வேண்டாம் என்று நீங்கள் நினைத்தாலோ சொல்லி விடுங்கள். என்னை மெண்டல் டார்ச்சர் செய்யாதீர்கள்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து வன்னி அரசு தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மாணவர் செய்த செலவீனங்களுக்கான சரியான ஆதாரங்கள் இல்லை என்றும், தமிழக அரசு உதவித்தொகையை நிறுத்தி வைத்திருப்பதாக அவர் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் பணி! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

மாணவர், தங்களுக்கு எந்தவித ஆதாரத்தையும் அனுப்பவில்லை என்று கூற, அதற்கு பாரதிதாசன் தான் அனைத்து ஆதாரங்களையும் அனுப்பி விட்டதாக வீடியோவில் காட்டினார். இதற்கு இடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக அரசே அந்த மாணவனின் செலவுகளை ஏற்கும் என்றார்.

வன்னி அரசு பதில்!

இன்னும் 2 நாட்களில், மாணவர் பாரதிதாசனுக்கு அனுப்பப்பட வேண்டிய உதவித்தொகை விடுவிக்கப்படும் என சமூக நீதித்துறை வன்னி அரசு தெரிவித்திருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘கல்வியை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று கூறியதை சுட்டிக்காட்டி பேசிய அவர், அவ்வளவு இருக்கிறது என்றால், கடந்த முறை 609 பேர் கொடுத்த விண்ணப்பத்தில் 601 பேருக்கு தகுதி இருந்தது. ஆனால், 150 பேருக்குதான் தகுதி இருக்கிறது என்று உதவித்தொகை கொடுத்தீர்கள், பிறருக்கு ஏன் கொடுக்கவில்லை? அப்போது நீங்கள் அரசியல் தானே செய்கிறீர்கள்? என்று கேட்டார்.

தொடர்ந்து, மாணவர் பாரதிதாசனை தன்னுடைய தம்பி என்று கூறிய அவர், தான் அமைச்சர் ஆனதே தன்னுடைய தம்பி பாரதிதாசன் படிக்கத்தான் என்றும், அவர் படிப்பிற்கு தவெக அரசு துணை நிற்கும் என்றும் கூறினார். அவருக்கு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.12 லட்சம் நிதியுதவி அளித்துள்ளோம் என கூறிய அவர், மீதி தொகையும் போய்ச்சேரும் என்றும் தெரிவித்தார்.
போன முறை ரூ.84 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாக கூறிய அவர், ஏன் அந்த நிதியை கூடுதாலாக ஒதுக்கவில்லை? என்று கேட்டார். மாணவர்கள், குறிப்பாக தலித் மாணவர்கள் மீதான அக்கறை என்பது இல்லாமல் திமுக அரசு இந்த நடவடிக்கை இல்லாமல் இருந்ததாக கூறினார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் நாளை (19-09-2026) மின்தடை.. எங்கெல்லாம்? முழு லிஸ்ட்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu