தாய்மாமன் தங்க மோதிரம் : நாமக்கல் மாவட்டத்தில் எந்தெந்த தேதிகளில் வழங்கப்படுகிறது?
Namakkal Thaimaaman Gold Ring Scheme : தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் கீழ் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு எந்தெந்த தேதிகளில் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
Namakkal Thaimaaman Gold Ring Scheme : தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையில் BIS ஹால்மார்க் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரையில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் முன்னிலையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் பயனாளிகள் மற்றும் விநியோக மையங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 22.06.2026 முதல் 26.09.2026 வரை அரசு மருத்துவமனைகளில் பிறந்த சுமார் 1,579 குழந்தைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வட்டார வாரியாக தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு அந்தந்த வட்டார மருத்துவ அலுவலர்கள் மூலம் தேதி மற்றும் இடங்கள் குறித்து அழைப்பிதழ் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், பெற்றோர்களின் வசதிக்காக அந்தந்தப் பகுதிகளில் இருந்து வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மற்றும் ராசிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய 3 முக்கிய மையங்களில் காலை மற்றும் மதியம் என இருவேளைகளில் மோதிரங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
மருத்துவமனை வாரியாக விநியோக கால அட்டவணை
1. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை:
03.10.2026: முற்பகல் – எருமப்பட்டி வட்டாரம் (27), பிற்பகல் – எருமப்பட்டி வட்டாரம் (26)
05.10.2026: முற்பகல் – புதுச்சத்திரம் வட்டாரம் (11), பிற்பகல் – புதுச்சத்திரம் (22), கபிலர்மலை வட்டாரம் (14)
06.10.2026: முற்பகல் – கபிலர்மலை (21); பிற்பகல் – மோகனூர் வட்டாரம் (29)
07.10.2026: முற்பகல் – மோகனூர் (18); பிற்பகல் – சேந்தமங்கலம் வட்டாரம் (25)
08.10.2026: முற்பகல் – சேந்தமங்கலம் வட்டாரம் (29)
2. திருச்செங்கோடு அரசு மருத்துவமனை:
03.10.2026: முற்பகல் – மல்லசமுத்திரம் (25), பிற்பகல் – மல்லசமுத்திரம் (14), எலச்சிபாளையம் (11)
05.10.2026: முற்பகல் – எலச்சிபாளையம் (25), பிற்பகல் – பள்ளிபாளையம் வட்டாரம் (25)
06.10.2026: முற்பகல், பிற்பகல் – பள்ளிபாளையம் வட்டாரம் (தலா 25)
07.10.2026: முற்பகல் – பள்ளிபாளையம் (27), பிற்பகல் – பள்ளிபாளையம் வட்டாரம் (25)
3. ராசிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை:
03.10.2026: முற்பகல், பிற்பகல் – நாமகிரிப்பேட்டை வட்டாரம் (தலா 27)
05.10.2026: முற்பகல், பிற்பகல் – வெண்ணந்தூர் வட்டாரம் (தலா 25)
06.10.2026: முற்பகல் – வெண்ணந்தூர் (25, பிற்பகல் – வெண்ணந்தூர் வட்டாரம் (14)
கொல்லிமலை வட்டாரம் மற்றும் விடுபட்டவர்களுக்கான இறுதி வாய்ப்பு
மலைப் பகுதியான கொல்லிமலை வட்டார பயனாளிகளுக்காக ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:
08.10.2026: முற்பகல் – சோளக்காடு ஆரம்ப சுகாதார நிலையம் (32), பவர்காடு ஆரம்ப சுகாதார நிலையம் (18), பிற்பகல் – சோளக்காடு ஆரம்ப சுகாதார நிலையம் (30)
09.10.2026: முற்பகல் – தேனூர்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் (13)
குறிப்பிட்ட தேதிகளில் நேரில் வர இயலாத மற்றும் விடுபட்ட குழந்தைகளுக்கான இறுதிச் சுற்று விநியோக முகாம் 09.10.2026 அன்று நடைபெறவுள்ளது.
தகுதிகள் மற்றும் ஆவணங்கள்
அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த அனைத்து தாய்மார்களும் பாலின வேறுபாடின்றி இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். பயனாளிகள் PICME தளத்தில் RCH ID பதிவு செய்திருக்க வேண்டும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தொழிலாளர் நல வாரிய அட்டை, அஞ்சலக முகவரிச் சான்று, இருப்பிடச் சான்று அல்லது ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தமிழக முகவரி இடம்பெற்றிருப்பது அவசியமாகும். மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள குறிப்பிட்ட அட்டவணைப்படி தாய்மார்கள் உரிய மையங்களை அணுகி மோதிரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.