• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /கரூர் பெருந்துயரின் ஓராண்டு நிறைவு: 41 பேரின் உயிருக்கு இன்று வரை பொறுப்பை புறக்கணிக்கு CM விஜய்?

கரூர் பெருந்துயரின் ஓராண்டு நிறைவு: 41 பேரின் உயிருக்கு இன்று வரை பொறுப்பை புறக்கணிக்கு CM விஜய்?

karur Stampede: தமிழக வரலாற்றையே உலுக்கியது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்து ஓராண்டு இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்த சம்பவம் நடந்த ஓராண்டு நிறைவையொட்டி, உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Written ByUmabarkavi K
Published: Sep 27, 2026, 11:48 AM IST|Updated: Sep 27, 2026, 12:56 PM IST
joinshare
கரூர் பெருந்துயரின் ஓராண்டு நிறைவு:  41 பேரின் உயிருக்கு இன்று வரை பொறுப்பை புறக்கணிக்கு  CM விஜய்?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Karur Stampede: தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருந்த வந்த தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, 2026 சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.  அந்த வகையில், கரூர் மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்காக 2025, செப்டம்பர் 27ஆம் தேதி முதல்வர் விஜய் சென்றார். இந்த நாள் ஒட்டுமொத்த தமிழகத்தாலும் மறக்க முடியாது நாளாக மாறப்போகிறது என அப்போது விஜய்க்கு தெரியாது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்

கரூர் மாவட்ட வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் முதல்வர் விஜய் கலந்து கொண்டார்.  இவரை பார்ப்பதற்காக அன்றைய தினம் காலை முதல் இரவு வரை ஏராளமான மக்கள், தொண்டர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர்.  மதிய நேரத்தில் விஜய் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. 

ஆனால், கூட்ட நெரிசலால் விஜய் வேலுசாமிபுரத்திற்கு வந்தடைய இரவு 7.30 மணிக்கு மேல் ஆனது. பின்னர், வழக்கம்போல் பிரச்சார வேனில் ஏறி விஜய் பேச தொடங்கினார். அப்போது, விஜய்யை அருகில் இருந்து பார்ப்பதற்காக ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்றனர். அப்போது, திடீரென நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. இதில் பலர் கீழே விழுந்தனர். ஒருவர் மீது விழுந்தனர். 

அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இநத் கூட்ட நெரிசலில் சிக்கி  41 பேர் மூச்சுத்திணறியும், மிதிப்பட்டும் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகள், பெண்களும் அடங்குவர்.  இந்தசம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி எடுத்தது. தங்கள் குழந்தைகள், உறவினர்களை வேலுச்சாமிபுரம் மக்கள் இழந்தனர்.

மேலும் படிக்க: Explained: தரிசு நிலங்களின் வகை மாற்ற விதிமுறைகளில் வந்த புதிய மாற்றம்! முழு விவரம்

அரசு மற்றும் தவெக சார்பில் நிவாரணம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு ஒவ்வொரு குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்ற எண் 855/25-ன் கீழ் BNS சட்டத்தின் 105, 110, 125(b), 223 ஆகிய பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு பொது சொத்துகள் சேதப்படுத்தல் தடுப்புச் சட்டத்தின் 3-வது பிரிவு என 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிபிஐ விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் தமிழக அரசு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஐஜி அஸ்ராக் கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.  

சிறப்பு புலனாய்வுக்குழுவின் விசாரணைக்கு பதிலாக, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து, உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ விசாரணைக்காக முதல்வர் விஜய்யும் மூன்று முறை டெல்லி சென்றார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இன்று வரை பொறுப்பை புறக்கணிக்கு  CM விஜய்

இவ்வளவு பெரிய துயர சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இப்போது வரை கூட, முதல்வர் விஜய் இந்த சம்பவத்திற்கு பொறுப்பை புறக்கணித்து வருகிறார்.  என்னதான் இந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட குடும்பதாரரிடம் முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்டு இருந்தாலும்,  இன்று வரை பெருந்துயரத்திற்கு பொறுப்பை ஏற்காமல் இருக்கிறார்.  

கரூர் சம்பவத்தில் தொடக்கத்தில் இருந்தே தன் மீதுள்ள தவறுகள் குறித்து முதல்வர் விஜய் ஒருமுறை கூட பேசியதில்லை.  தனக்கு இந்த சம்பவத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போன்று, மேடைக்கு மேடை காவல்துறை, திமுக மீது பழிபோட்டு வருகிறார்.

தொடர்ச்சியாக இன்று வரை திமுகவை குறை கூறுவது அரசியல் உத்தியாக பயன்படுத்தி வருகிறார். அவரது பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இருக்கும்போது, அதில் தனக்கு இருக்கும் பொறுப்பையும் ஒரு முதலமைச்சராக தனக்கு இருக்கும் பொறுப்பையும் உணராமலே மேடைகளில் அவர் பேசி வருகிறார்.

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் கூட, திமுக தான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்கிற ரீதியிலேயே அவரது பேச்சுக்கள் இருந்தன. இன்று வரை இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், திமுக மீது பழிபோட்டு அரசியலை நகர்த்தி வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க: மதுராந்தகம் : அக்டோபர் 6 விடுமுறை! ஊதியம் வழங்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவு
 

pic.twitter.com/FipkqoLlmB

— TVK Vijay (@TVKVijayHQ) September 30, 2025

 

முதல்வர் விஜய் அஞ்சலி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்  நடந்து ஓராண்டு நிறைவையொட்டி முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "கடந்த வருடம்.  இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். 

சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும் நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி" என்றார்.

நீதி கிடைக்கவில்லை

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிபிஐ இந்த விசாரணையை ஏற்றுக்கொண்டு  11 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது . மீண்டும் ஒரு வழக்குப் பதிவு செய்து, ஒரு பிரத்யேகக் குழுவை அமைத்த விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் தவெகவினர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், உயிர் பிழைத்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான நேரில் கண்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளது. 

அது காணொளிக் காட்சிகளையும் சேகரித்து ஆய்வு செய்தது. ஆனால், இதுவரை இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எந்தக் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் மக்களுக்குப் பல கேள்விகளுக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. குறைந்த பரப்பளவு கொண்ட ஒரு பகுதிக்கு ஏன் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்து? முறையான தடுப்புகளும் அவசரகால வெளியேற்றப் பாதைகளும் ஏன் அமைக்கப்படவில்லை? ஆம்புலன்ஸ்கள் எளிதாகச் சென்றடைய முடிந்திருந்தால், அந்த 41 உயிர்களையும் காப்பாற்றியிருக்க முடியுமா? 

விஜய் வர தாமதமாகியிருந்தால் பரப்புரையை ரத்து செய்திருக்கலாமே? என்ற கேள்விகளுக்கு இன்று வரை பதில் கிடைக்காமல் இருக்கிறது. இந்த ஓராண்டு நினைவு தினத்தில் மக்களின் மனங்களில் அழியாத ரணமாக பதிந்திருக்கும் பெருந்துயரம் தொடர்பாக சிபிஐ மேற்கொள்ளும் விசாரணையை விரைவுபடுத்தி அதற்கு காரணமானவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வேலுசாமிபுரம் மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

மேலும் படிக்க; தலைமுடி வெட்டியது ஒரு பிரச்னையா? எனக்கு மட்டும் ஏன் இப்படி? வேதனையில் மேயர் பிரியா
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Vijay Thalapathy