• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /அக்டோபர் 6ஆம் தேதி பொது விடுமுறை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.. ஏன் தெரியுமா?

அக்டோபர் 6ஆம் தேதி பொது விடுமுறை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.. ஏன் தெரியுமா?

Madurantakam, Dharapuram Bypolls: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், வாக்குப்பதிவு நாளான அக்.06ம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் பகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Written ByUmabarkavi K
Published: Sep 22, 2026, 11:34 AM IST|Updated: Sep 22, 2026, 12:02 PM IST
joinshare
அக்டோபர் 6ஆம் தேதி பொது விடுமுறை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.. ஏன் தெரியுமா?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

2

நியூசிலாந்துக்கு பறக்கிறார் முகமது ஷமி - இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்பு - ஏன்?

3

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

4

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

5

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Madurantakam, Dharapuram Bypolls: தமிழகத்தில் அக்டோபர் 6ஆம் தேதி தாராபுரம், மதுராந்தகம்  தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 16ஆம் தேதி முடிவடைந்தது. வேட்பு மனு பரிசீலினை செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடந்து, அன்றைய தினமே இடைதேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோப்ர 6ம் தேதி பொது விடுமுறை

தமிழபத்தில் அக்டோபர் 6ஆம் தேதி (செவ்வாய்கிழமை) பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய  தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு அக்டோபர் 6ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அன்றைய தினம் செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மேற்கண்ட தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பணிபுரியும், மேற்கண்ட தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே நாளில், மற்ற மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த சில வாரங்களிலேயே அதிமுக  எம்எல்ஏக்கள் 6 பேர் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். 

மேலும் படிக்க: உச்சத்தில் பால், தயிர் விலை.. லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?

இதனால், முதல்வர் விஜய் ராஜினாமா  செய்த திருச்சி கிழக்கு, மதுரந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர் ஆகிய 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் 5 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தாராபுரத்தில் தவெக  வேட்பாளராக சத்தியபாமா, திமுக  வேட்பாளராக  வழக்கறிஞர் சுகன்யா, நாதக  வேட்பாளராக கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக லட்சுமணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளராக பரந்தாமன்,  அதிமுக வேட்பாளராக கனிதா சம்பத், சிபிஎம் வேட்பாளராக சுகந்தி, நாதக வேட்பாளராக ஜானகி ராமன் ஆகியோர் களிமிறங்கியுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், அப்பகுதியில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவாகும் 'அர்னாப்' புயுல்! தமிழகத்திற்கு ஆபத்தா? வெதர்மேன் அலர்ட்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu