• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை..? 13 ஆண்டுகளுக்கு பின் வந்த தீர்ப்பு-பின்னணி என்ன?

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை..? 13 ஆண்டுகளுக்கு பின் வந்த தீர்ப்பு-பின்னணி என்ன?

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் பற்றி, சவுக்கு சங்கர் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 30, 2026, 02:46 PM IST|Updated: Sep 30, 2026, 02:54 PM IST
joinshare
சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை..? 13 ஆண்டுகளுக்கு பின் வந்த தீர்ப்பு-பின்னணி என்ன?
Image Credit: Savukku Shankar | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தன்னை பற்றிய, அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக கூறி, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது, தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் கடந்த 2013ஆம் ஆண்டில், புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் பின்னணி என்ன? சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கிடைத்த விவரம் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை!

போலீசார், அந்த செய்தி வாசிப்பாளர் கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை, சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது, சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, நீதிபதி சிவசக்தி தீர்ப்பளித்திருந்தார்.

மேலும் படிக்க | தமிழ்நாடு மின்தடை.. நாளை (அக்டோபர் 01) எங்கெல்லாம்? லிஸ்ட் இங்கே!

30 நாட்கள் கால அவகாசம்:

சவுக்கு சங்கர் தரப்பிலிருந்து, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என வாதிடப்பட்டது. இந்த 3 ஆண்டு சிறை தண்டனை உத்தரவை எதிர்த்து, சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்களுக்கு, அவகாசம் வழங்கிய நீதிபதி, அவருடைய தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருக்கிறார்.

வழக்கின் பின்னணி:

வழக்கு தொடுத்த செய்தி வாசிப்பாளர், தன்னுடன் பணியாற்றும் வேறு ஒரு இளம் பெண் செய்தி வாசிப்பாளரை, தன்னுடைய சகோதரருக்கு திருமணம் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதால், அந்த இளம் பெண் செய்தி வாசிப்பாளர், அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A மற்றும் பெண்கள் வன்கொடுமை தடைச்சட்டம் பிரிவு 4ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, சவுக்கு நெட் இணையதளத்தை நடத்தும் ஏ.சங்கருடன் சேர்ந்து, அந்த செய்தி வாசிப்பாளர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு எதிராக, அவதூறான மற்றும் தவறான செய்திகளை இணையதளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

அந்த அவதூறு பதிவுகளை இணையதளத்தில் இருந்து நீக்குவதற்காக, சவுக்கு சங்கரும், அவருடைய கூட்டாளிகளும் தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும், போலி ஆவணங்களை தயாரித்ததாகவும் அந்த செய்தி வாசிப்பாளர் எழும்பூர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். 

மேலும் படிக்க | ஒப்பந்த செவிலியர் நியமனத்தில் முறைகேடு புகார்: அமைச்சர் அருண்ராஜ் தொகுதியில் வெடித்த சர்ச்சை

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime